யாருடைய ஆட்சி, முஸ்லிம்களுக்கு சாதகமானது..?
-அ.அஹமட்-
இவ்வரசானது ஞானசார தேரரை கைது செய்ய முடியாமல் இருப்பதன் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதான கதைகள் எழுந்தாலும் மக்கள் பார்வைக்கு பெரும் பான்மை மக்களால் ஒரு மத குரு கைது செய்யப்படும் போது எழத்தக்க அழுத்தத்தையே வெளி காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஏழு நாடுகளின் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் தெவட்டகஹ பள்ளிவாயலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அசாத் சாலி, ஞானசார தேரரை கைது செய்யாமல் தடுக்கும் பிரபலம் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தான் என கூறியுள்ளார். இதன் மூலம் ஞானசார தேரரை கைது செய்ய முடியாமல் இருப்பதன் பின்னணியில் அரசியல் பின்புலம் உள்ளதை ஏற்றுக்கொள்கிறார். இப்படியான அரசின் முக்கியஸ்தர்கள் அசாத் சாலியுடன் மிக நெருங்கிய தொடர்பை பேணி வருகிறார்கள் என்பதே உண்மையாகும். இதுவே அவரது சமூகப் பற்றின் உண்மை வடிவமாகும்.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ ஐ.தே.கவின் முக்கியமான அமைச்சர் என்பதால் இத்தனை நாளும் ஞானசார தேரரின் பின்னால் மஹிந்த தான் உள்ளார் என கூறி வந்த அசாத்சாலி தனது கருத்திலிருந்து திடீரென பெல்டி அடித்துள்ளார். இதன் மூலம் அன்றும் இனவாதத்தை ஆட்டு வித்த சக்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவல்ல என்பதை அசாத் சாலி மக்கள் முன்றலில் தெளிவுபடுத்துகிறார். இவர்கள் அன்று எதுக்கெடுத்தாலும் முன்னாள் ஜனாதிபதியை குற்றம் சுமத்தியவர்கள் என்பதால் இவர்களின் இவ்வாறான சான்றுதல் மிகவும் முக்கியத்துவமிக்கதாகும்.
ஞானசார தேரரை கைது செய்யாமையின் பின்னால் தற்போதும் முன்னாள் ஜானதிபதியே உள்ளார் என்பதை இலங்கை முஸ்லிம்கள் ஏற்கும் மனோ நிலையில் இல்லை. இதனை உணர்ந்த அசாத்சாலி தனது பாதையை இன்னுமோர் திசை நோக்கி திருப்புகிறார். உண்மை எப்போதாவது ஒரு நாள் வெளிப்பாட்டேயாகும்.
நீதி அமைச்சர் விஜயதாஸ தடுக்கின்றார் என்றால் அவர் இவ்வாட்சியில் தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தடுக்கின்றார் என்பதே பொருளாகும். அண்மையில் ஞானசார தேரரை குருநாகலில் வைத்து கைது செய்யும் முயற்சிகள் இடம்பெற்றன. அந்த முயற்சிகளானது மக்களால் தடுக்கப்பட்டது போன்றே வெளியில் காட்டப்பட்டிருந்தது. அசாத் சாலி கூறுவதை வைத்து நோக்கும் போது அண்மையில் அவரை குருநாகலில் வைத்து கைது செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் என்பது முஸ்லிம்களை ஏமாற்ற மேற்கொள்ளப்பட்ட நாடகமாகும் என்பது தெளிவாகிறது. இது தொடர்பில் அசாத் சாலி மௌனம் பேணுவதேன்?
இப்படி இனவாதிகளுக்கு ஆதரவானவருக்கு நீதியமைச்சு ஒரு போதும் பொருத்தமானதல்ல. இவ்வாட்சியானது அசாத் சாலி குற்றம் சாட்டும் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு நீதி அமைச்சை கொடுத்து அழகு பார்க்கின்றது. இவ்விடயமானது இவ்வரசும் இனவாத சக்திகளுக்கு பலம் வழங்கி துணை போவதை அறிந்துகொள்ளச் செய்கிறது. இந்த விடயத்தில் நீதியை நிலை நாட்ட முடியாமல் இருப்பதற்கு இவர் ஒரு காரணமாக அமையலாம்.
அளுத்கமை கலவரம் இடம்பெற்ற போது நீதி அமைச்சராக முஸ்லிம் ஒருவரே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவைகளை வைத்து சிந்தித்தாலும் யாருடைய ஆட்சி முஸ்லிம்களுக்கு சாதகமானது என்பதை மிக இலகுவாக ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
WR was also close to to Gota & MR and was the attorney for Avant Garde Case. Who told is not important, what was told only matters.
ReplyDeleteA VALUABLE ADVICE TO SRI LANKAN MUSLIMS, Insha Allah.
ReplyDelete”The powerless should not accept their powerlessness. They may not succeed in getting power but they can fight for it, and if enough fight for it, it makes it very difficult for the people with the big sticks.”
Jane Jacobs . American-Canadian journalist, author, and activist.
Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for your personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".
Noor Nizam - Convener "The Muslim Voice".
Noor Nizam, I notice you're keep on telling ACJU support for regime change for their personal gains. Could you kindly elaborate us what kind of personal gains they got from this government. Are you arguing defeating MR is a wrong thing. Yes we have problems now. But at least we can raise our voice. Don't forget these all racist are production of Rajapakshe family.
DeleteNoor niza mr
DeleteYour article was very dark
Your artical not metchword to your name
Mahinda, Maithiri and Ranil all are same. there is no any different between both them. better coming all election we need to support JVP for a change. JVP supporting all kind of issues and all religions.
ReplyDeleteWJ is not only a Minister for Justice but also he holds the post of Buddasana Ministry. Everyone knows he is behind this Gnanasara drama since their closed door meeting with the president. And Gnanasara is to be arrested for disrespecting the courts not for the hate campaign.
ReplyDeleteAzath Sally is protecting My3 by saying that Wijedasa Rajapakse prevents the arrest of Janasara.
ReplyDeleteஇன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
ReplyDelete(அல்குர்ஆன் : 22:78)
www.tamililquran.com
முஸ்லிம்களுடைய ஆட்சியைத் தவிர, வேறு யாருடைய ஆட்சி அவர்களுக்குச் சாதகமாயிருக்கும்?
Deleteஇறைவனோ தருவதற்குத் தயாராகவே இருக்கிறான். நாங்களோ அதற்குத் தகைமையற்றோராய் இருக்கிறோம்!
Azath Sally is protecting My3 by saying that Wijedasa Rajapakse prevents the arrest of Janasara.
ReplyDeleteMahinda or My3, Muslim Party Leaders are benefited.
ReplyDeleteகட்டுரையாளர் மருந்தை கண்ட இடத்தில் பிள்ளையை பெற்றடுக்க முயற்சிக்கிறார்.நாடு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து நாட்டை மாறி மாறி ஆட்சி செய்வர்களுக்கு இனவாதிகளின் ஆதரவு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது அந்த வரிசையில் மஹிந்தவும் ஒருவர் அவர் பாவித்த அதே ஞானங்கள் ஆளுங்கட்சிக்கு தேவைப்பட்டது,இனவாதிகளுக்கும் காய்த்த மரத்தோடு ஒட்டி இருந்தால்தானே சுகபோகத்தோடு உலாவ முடியும்
ReplyDeleteஇந்த கொசுத்தொல்லையை (Noor Nizam) தாங்க முடியல்ல.
ReplyDeleteBrother Hassen Jaleel,
ReplyDelete"ULATHA SONNAA UDAMBU MULUKA NOOKUM" The Tamil proverb seems TRUE according to your silly comment. Please browse
https://www.colombotelegraph.com/index.php/political-religious-leadership-crisis-of-sri-lankan-muslims/
https://www.colombotelegraph.com/index.php/mmda-angry-civil-society-demanding-radical-changes-to-acju/. You will get a fair insight.
There were rumours of serious allegations of Transparency and Integrity of funds accumulated by the ACJU/Rizvi Mifthi and his high profile life style that were on the books during the later part of 2014, which are rumoured to be stalled by the "Yahapalana" government. That is why ACJU/Rizvi Mufthi supported the regime change. Many hidden truths have been buried in the Aluthgama/Beruwela riots where the ACJU with the other Muslim community players did not wish the Muslim voters to know, in case the former regime remained in power. That is the reason that NO Presidential Commission to probe the Aluthgama/Beruwela Riots which was promised by the "Hansaya group" and the "Yahapalana government" has been suppressed. Maybe some young Muslim lawyers will use the Right To Information Bill/ACT privileges in a later date and let the Muslim voters know MORE about the truth, In Sha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".