முஸ்ஸிம்களின் வாக்குகளுக்காக அலையும் ரணில் + மஹிந்த, ஞானசாரர் நீதியை விட்டு ஓடவில்லை
ஞானசாரரை அரசு ஒளித்து வைத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இது போன்று சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை மகிந்த தெரிவிக்க வேண்டாம் என பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,
ஞானசாரரை யாரும் ஒளித்து வைக்கவும் இல்லை, அவர் மறைந்தும் இருக்கவில்லை என்பதே உண்மை. மகிந்த ராஜபக்ச மீது நாம் மரியாதை வைத்துள்ளோம். ஆனால் அவர் கூறியுள்ளார், ஞானசாரரை அரசு ஒளித்து வைத்துள்ளதாக, தயவு செய்து இது போன்ற கருத்துகளை வெளியிட வேண்டாம்.
விமல் வீரவன்ச போன்றோர் இவ்வாறு தெரிவித்தால் பரவாயில்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச நன்றாக அரசியல் தெரிந்தவர். அத்தோடு நாட்டின் ஜனாதியாக இருந்த நீங்கள் 2ஆம் தரத்தில் கல்வி பயிலும் சிறு பிள்ளை போன்று கருத்துகளை வெளியிட வேண்டாம்.
ஞானசாரர் நீதியை விட்டு விலகி ஓடவில்லை, அவற்றிக்கு முகம் கொடுப்பதற்காக அவர் வெளிவருவார்.
மேலும், திஸ்ஸ விதாரன கூறியது போல் சம்பிக்க ரணவக்க ஞானசாரரை ஒளித்து வைக்கவில்லை. அதே போன்று விஜயதாச ராஜபக்சவும் அவரைக் காப்பாற்றிக் கொண்டு வரவில்லை.
இதேவேளை மகிந்தவும், ரணில் விக்ரமசிங்கவும் முஸ்ஸிம் மக்களின் வாக்குகளுக்காக அலைகின்றனர். இவர்கள் முஸ்ஸிம்களுடன் இணைந்து செயற்பட தயாராகி வருகின்றனர்.
இவர்கள் மூலமாக பௌத்தத்திற்கு எந்த இலாபமும் இல்லை என்பதே உண்மை எனவும் திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
Welcome
ReplyDeleteJVP katchiku wakualinga ella pirachinaim paitidum
ReplyDeleteit is lough ! kuffarhal ellam oru maraththu kaihal
ReplyDeleteO Muslim society in Sri Lanka! You may not dream that JVP will be your absolute hope but by strengthening JVP, you're atleast alarming SLFP/UNP.
ReplyDeleteThe wise don't keep doing what's not working for them: 1. your association with both SLFP/UNP alternatively all your life has never been working for you. 2. your Muslim MPs that you keep sending to the parliament repeatedly are definitely not working to fight for your basic rights.
Wake up and act now before you become like Myanmar. The consequence, the exact danger of the choices you made repeatedly over and over again already sprouted and think if you want to nip it in the bud itself or let it bloom.
Take a few pages from France's Macron's election!
O Muslim media/society, while the Buddhist community rejected and continue to ignore Gnasara, YOU, REFRAIN FROM MAKING THE MISTAKE OF UNNECESSARILY MAKING HIM A CELEBRITY AND SEND HIM TO THE PARLIAMENT NEXT TIME!