Header Ads



முஸ்லிம்களின் இரத்தத்தை உறுஞ்சும், பேய்களிடம் சரணாகதி

-AL Thavam-

இஸ்ரேலின் யூத சியோனிச சிந்தனையாளர்களுக்கும் (Think-Tanks closely allied to Israel,) – ஐக்கிய அரபு ராஜ்ஜிய (UAE) தூதுவருக்கும் இடையில் நடந்த மின்னஞ்சல் (ஈமெயில்) பரிவர்த்தனைகளை லீக் செய்ததற்காக - சவூதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு ராஜ்ஜிய, எகிப்து உள்ளிட்ட ஐந்து நாடுகள் - கட்டார் நாட்டுடனான ராஜதந்திர உறவுகளையும் மற்றும் கடல் & விமானப் போக்குவரத்துக்களையும் துண்டித்துள்ளதாக அறிவித்திருப்பது ஆச்சரியத்தையும் கவலையையும் தருகிறது.

இம்மின்னஜ்ஜலை லீக் ஆக்கியதினூடாக - துருக்கியில் ஏற்பட்ட இராணுவச் சதிப்புரட்சி - எகிப்தில் இடம்பெற்ற சகோதரத்துவக் கட்சிக்கு எதிரான சதிகள் - பாலஸ்தீனத்தில் ஹமாஸிற்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவற்றில் - ஐக்கிய அரபு ராஜ்ஜியம் உட்பட இந்த நாடுகள் - எந்தளவுக்கு அமரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் சார்பாகப் பங்களிப்புச் செய்துள்ளன – முஸ்லிம்களின் உயிரைக் குடிக்க உதவியுள்ளன - என்பதை வெளிப்படுத்தியதுதானாம் செய்த குற்றமாம்.

இத்தனைக்கும் லீக் செய்தவர்கள் கட்டார் அரசாங்கம் அல்ல. மாறாக கட்டாரின் அரச இணையத்தளங்களை ஊடுருவியவர்களே (HACKERS) இவ்வாறு செய்துள்ளனர். கட்டார் அரசாங்கம் இதனைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவற்றைக் காதில் வாங்கும் மனநிலையில் இந்நாடுகள் இல்லை.

தற்போது கட்டார் நாட்டை ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் உறவினைப் பேணும் நாடு என்பதால்தான் ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதாக இதே அரபு / முஸ்லிம் நாடுகள் மேற்கத்திய ஊடகங்களூடாக (BBC, CNN) பிரச்சாரங்களை முடக்கி விட்டுள்ளன.

அதாவது அமெரிக்க – இஸ்ரேலிய கைப்பொம்மைகள் அவர்களின் தாளங்களுக்கு நடனமாடத் தொடங்கி விட்டன.

3 comments:

  1. I too feel sad about the message of Qatar separation as a Muslims country we should stay to gather. BUT

    Your each claim in the writings needs proof and based on facts.
    not just trying to show bad impression of other countries to worst level.

    Qatar is one of the most important country for Arab and Muslim world. But if it tries to keep close ties with SHIA Iran and Muslim brotherhood, who only find mistakes from kings to topple them (which is against to the teaching of Islam)... I expat Qatar to turn to their brothers of sunnah and not to shia.

    May Allah Keep All our Muslim nations together in the path of Allah.

    ReplyDelete
  2. 51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

    ReplyDelete
  3. 51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

    ReplyDelete

Powered by Blogger.