Header Ads



முஸ்லிம்களின் பிர‌ச்சினைக‌ளுக்கு ர‌ணில், பொறுப்பு சொல்ல‌ வேண்டும்

ந‌ம‌து நாட்டின் த‌ற்போதைய‌ ஜ‌னாதிப‌தி நிறைவேற்று அதிகார‌த்தை முழுமையாக‌ கொண்ட‌வ‌ர‌ல்ல‌. பெரும்பாலான‌ அதிகார‌ம் பிர‌த‌ம‌ருக்கும் பாராளும்ன்ற‌த்துக்கும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு விட்ட‌து.  பொலிஸ் அதிகார‌ம் முழுக்க‌ பிர‌த‌ம‌ரிட‌ம்தான் உள்ள‌து. அத‌னால் முஸ்லிம்க‌ள் எதிர் நோக்கும் பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு வ‌ழ‌ங்க‌ வேண்டிய‌ க‌ட‌மையும் பொறுப்பும் ர‌ணிலுக்கே உண்டு. 

இது விட‌ய‌த்தில் ஜ‌னாதிப‌திக்கும் பொறுப்புண்டு. ஆனால் அவ‌ரால் ர‌ணிலை மீறி எதையும் செய்ய‌ முடியாது என்ப‌து அர‌சிய‌ல் க‌ள‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு தெரியும். 

அத்துட‌ன் ஜ‌னாதிப‌தியை தேர்த‌லுக்கு கொண்டு வ‌ந்த‌து, அவ‌ரை வெல்ல‌ வைக்க‌ உழைத்த‌து எல்லாமா ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியும் ர‌ணிலுமாகும். மைத்திரியின் வெற்றி unp யின் வெற்றியாகும். இத‌ன் கார‌ண‌மாக‌வே ர‌ணில் பிர‌த‌ம‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நாட்டின் நிறைவேற்று அதிகார‌ ஜ‌னாதிப‌தி முறையை ஒழிப்ப‌தை ஐ தே க‌வும் மைத்திரியின் பிர‌தான‌ தேர்த‌ல் கோஷ‌மாக‌ இருந்த‌து. இத‌ன்ப‌டி அவ‌ர் த‌ன‌து அதிகார‌ங்க‌ளை துற‌ந்தார். ஆனாலும் ச‌ர்வ‌ஜ‌ன‌ வாக்கெடுப்பின்றி சில‌ அதிகார‌ங்க‌ளை பிர‌த‌ம‌ரிட‌ம் வ‌ழ‌ங்க‌ முடியாது என‌ நீதி ம‌ன்ற‌ம் சொல்லிவிட்ட‌து.

இவ்வாறு த‌ன‌து அதிகார‌த்தை பாராளும‌ன்ற‌த்துக்கு ஒப்ப‌டைக்க‌ முய‌ற்சி செய்த‌ ஜ‌னாதிப‌தி அத்த‌கைய‌ அதிகார‌ங்க‌ளை பாவிப்பார் என‌ எதிர் பார்க்க‌ முடியாது. அத்துட‌ன் அடுத்த‌ தேர்த‌லில் தான் போட்டியிட‌ப்போவ‌தில்லை என‌ தெளிவாக‌ அறிவித்த‌ ஜ‌னாதிப‌தியிட‌மிருந்து தேர்த‌லை நோக்கிய‌ செய‌ற்பாட்டை எதிர் பார்க்க‌வும் முடியாது. 

ஆனால் ஐ தே க‌ என்ப‌து நாட்டின் பிர‌தான‌ க‌ட்சி என்ப‌தாலும் எதிர் வ‌ரும் தேர்த‌ல்க‌ளில் முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ளின் பால் தேவையுள்ள‌ க‌ட்சி என்ப‌தாலும், ப‌ல‌ அதிகார‌ங்க‌ளைக்கொண்ட‌ பிர‌த‌ம‌ர் ப‌த‌வி கொண்ட‌ க‌ட்சி என்ப‌தாலும் முஸ்லிம்க‌ள் அக்க‌ட்சியின் அச‌ம‌ந்த‌ப்போக்குக்கு எதிராக‌ குர‌ல் எழுப்ப‌ வேண்டிய‌து அவ‌சிய‌மாகும்.  சில‌ வேளை ஜ‌னாதிப‌தி தேர்த‌ல் வ‌ரும் போது நாம் பொதுப‌ல‌சேனாவை அட‌க்க‌ முய‌ன்றோம். ஜ‌னாதிப‌திதான் விட‌வில்லை என‌ ப‌ழி போட்டு த‌ப்பிக்க‌வும் முய‌ற்சி செய்வார்க‌ள்.

ஆக‌வேதான் ச‌ம‌கால‌த்தில் முஸ்லிம் ச‌மூக‌ம் எதிர் நோக்கும் பிர‌ச்சினைக‌ளுக்கு ந‌ல்லாட்சியை கொண்டு வ‌ந்த‌ ர‌ணிலும் ஐ தே க‌வுமே பொறுப்பு சொல்ல‌ வேண்டும் என்ப‌தை முஸ்லிம்க‌ள் உர‌க்க‌ சொல்ல‌ வேண்டும். இல்லாவிட்டால் அனைத்தையும் செய்து விட்டு எதிரி த‌ப்பி விடுவான். 

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி
த‌லைவ‌ர்
உல‌மா க‌ட்சி

7 comments:

  1. உ. க. தலைவர் அறிக்கை விடுவதில் ரொம்ப ரொம்ப புத்திசாலி. அது சரி ஆலிமு இந்நிலைமையை எதிர்கொள்ள மாற்றுத்திட்டம் ஏதாவது பற்றி பேசியதுண்டா? sorry பானையில இருந்தா அகப்பையில வந்திருக்குமில்ல. நீங்களும் சாதாரண அரசியல்வாதிதானே!
    உங்களுடனுமுள்ள 4, 10 பேரையும் கூட்டிச்சென்று பேரம்பேசலில் ஈடுபடுங்க பெரீய .... தொகை கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. WELL SAID BROTHER
      EVERY ONE GIVING GOOD OPINION
      BUT THEY DONT HAVE ACTION AND PATIENT
      AT ALL

      Delete
    2. WELL SAID BROTHER
      EVERY ONE GIVING GOOD OPINION
      BUT THEY DONT HAVE ACTION AND PATIENT
      AT ALL

      Delete
  2. ஐக்கிய தேசிய கட்சிக்கு உணர்வு பூர்வமாக ஆதரவு கொடுப்பவர்கள் கொழும்பு பிரதேச முஸ்லிம்களாக காணப்படுகின்றார்கள் .எந்த சந்தர்ப்பத்திலும் இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் .எனவே கொழும்பு முஸ்லிம்களிடம் ஐக்கிய தேசிய கட்சியிடம் கேள்வி கேட்கும் மனநிலை உருவாகும்போதுதான் அந்த கட்சியிடம் முஸ்லிம்கள் சம்பந்தமான நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் .

    ReplyDelete
  3. I'm normally not agree with this Ulama Katchi but this article contains some truth and Muslims should change their view about UNP and Ranil

    ReplyDelete
  4. We have to accept zionist back UNP is big enemy of muslims.

    ReplyDelete
  5. nowadays i see some valuable inputs (thinking) from Mubarak Moulavi.... it is appreciated somehow!

    we always SHOULD LOOK AT THE WORDS, NOT AT THE PERSON!!

    ReplyDelete

Powered by Blogger.