வெட்கம், அச்சம் இல்லாமல் போனதால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது - மேர்வின் சில்வா
இராணுவத்தில் சேவையாற்றும் நபருக்கு எந்த வகையிலும் அரசியல் அறிவு இல்லை எனவும் இதனால், மக்களின் மன உணர்வு குறித்து புரிந்துணர்வு இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நீ்ங்க வேண்டி களனி உப்பளவன்ன விஷ்ணு ஆலயத்தில் நேற்று (01) நடைபெற்ற சமய நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
களனி பிரதேசத்தில் தான் செய்த சேவைகளை அறிந்து கொள்ள வேண்டுமாயின் ஐந்து அறிவு ஜீவன்களுக்கு உண்ண மோப்ப உணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும், சில விலங்குகளுக்கு இருக்கும் இயலுமை மரநாய்களுக்கு இருப்பதில்லை எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்கு தற்போது வெட்கம் மற்றும் அச்சம் என்பன இல்லாமல் போயுள்ளதால், நாட்டில் அனர்த்தமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது மகிந்த ராஜபக்ச அந்த நிலைமையை சிறப்பாக முகாமைத்துவம் செய்தார்.
எது எப்படி இருந்த போதிலும், ஏற்பட்ட அனர்த்த நிலைமையில் அரசாங்கம் இதனை விட அக்கறை மற்றும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
நரம்பு கட்டமைப்பில் தளர்ச்சி ஏற்பட்டுள்ள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment