Header Ads



அஸ்­கி­ரிய பீடத்தின் அபாய அறி­விப்பு


(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

கண்டி அஸ்­கி­ரிய மகா விகா­ரையின் பிக்­குமார் சங்க நிர்­வாகக் குழு விடுத்­துள்ள அறிக்கை பலத்த வாதப் பிர­தி­வா­தங்­களைத் தோற்­று­வித்­துள்­ளது.

சிறு­பான்­மை­யினர் மாத்­தி­ர­மன்றி நீதி நியா­யத்­துக்­காக குரல் கொடுக்­கின்ற பெரும்­பான்­மை­யி­னரும் கூட இந்த அறிக்கை தொடர்பில் தமது காட்­ட­மான விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்­ளனர். (இவ்­வ­றிக்­கை­யையும் அது தொடர்­பான சிங்­கள சமூக பிர­மு­கர்­களின் விமர்­ச­னங்­க­ளையும் 2 ஆம் பக்கம் பார்க்­கலாம்)

குறித்த அறிக்­கை­யா­னது நாட்டில் தோற்றம் பெற்­றுள்ள இன­வாத சூழலை நியா­யப்­ப­டுத்தி ஆமோ­திப்­ப­தா­கவும் மேலும் ஒட்­டு­மொத்­தத்தில் ஞான­சார தேரரைக் காப்­பாற்­று­வ­தா­க­வுமே அமைந்­துள்­ளது. பிக்­கு­களைக் கைது செய்­வதோ அல்­லது அவர்­களை விமர்­சிப்­பதோ நாட்டில் பாரிய குழப்­பங்­க­ளுக்கு இட்டுச் செல்லும் என்று அந்த அறிக்கை எச்­ச­ரிக்­கி­றது.


அப்­ப­டி­யானால் இந்த நாட்டில் பௌத்த மதத்தின் காவ­லர்­க­ளாக இருப்­ப­வர்­களும் வன்­மு­றை­க­ளுக்கும் வெறுப்புப் பேச்­சு­க­ளுக்கும் அநீ­தி­க­ளுக்கும் துணை போகி­றார்­களா எனும் கேள்வி எழு­கி­றது. இது மிக மோச­மா­ன­தொரு சமிக்­ஞை­யாகும்.

ஒட்­டு­மொத்­தத்தில் இந்த நாட்டின் அர­சி­யல்­வா­திகள், பொலிஸார், நீதித்­துறை மற்றும் பௌத்த பீடங்­களின் தலை­மைகள் மீதும் சிறு­பான்மை மக்­களும் மனித உரிமை ஆர்­வ­லர்­களும் நம்­பிக்கை இழக்­கின்ற நிலைமை தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் போக்கு நாட்­டிற்கு ஒரு­போதும் ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. 

அதிலும் குறிப்­பாக இந்த நாடு தவ­றான பாதையில் செல்லும் போது அதனைத் தடுத்து நிறுத்தி சரி­யான பாதையில் வழி­ந­டாத்­து­வ­தற்­கான பொறுப்பு பௌத்த பீடங்­க­ளுக்கே உண்டு. எனினும் அந்தப் பொறுப்­பி­லி­ருந்து முற்­றாக நீங்­கி­யுள்ள அஸ்­கி­ரிய பீடம், இன­வா­தத்­துக்கு பச்சைக் கொடி காட்­டி­யி­ருப்­பது வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.

கடந்த ஆட்­சி­யா­ளர்­களால் இந்த நாடு அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்­லப்­பட்­ட­போது மறைந்த சோபித தேரர் தனது உயிரைக் கூட துச்­ச­மாக மதித்து களத்­தி­லி­றங்கிச் செயற்­பட்டார். அதன் மூலம் ஆட்சி மாற்­றத்­திற்கு வித்­தி­டப்­பட்­ட­துடன் ஊழல் மோச­டிகள், அதி­கார துஷ்­பி­ர­யோ­கத்­திற்கும் முற்றுப் புள்ளி வைக்­கப்­பட்­டது.

எனினும் அவ­ரது மறை­வுக்குப் பிறகு மீண்டும் இன­வாத சக்­திகள் தலை­தூக்கத் தொடங்­கி­யுள்­ளன. அவரால் ஆட்­சியில் அமர்த்­தப்­பட்­ட­வர்­களும் தவ­றான பாதையில் பய­ணிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

இந்­நி­லையில் சோபித தேரர் விட்டுச் சென்ற நல்ல பணியை தொடர்ந்து முன்­னெ­டுக்க வேண்­டிய இந்த பௌத்த பீட­மா­னது அவர் பய­ணித்த பாதைக்கு முற்­றிலும் எதிர்த்­தி­சையில் பய­ணிப்­ப­தற்­கான சமிக்­ஞையை வெ ளிப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­னது அதிர்ச்­சி­ய­ளிப்­ப­தா­க­வுள்­ளது.

இதே­வேளை நீண்ட நாட்­க­ளாக தலை­ம­றை­வாக இருந்து வந்த பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் நேற்று முன்­தினம் தினம் கோட்டை நீதி­மன்றில் சர­ண­டைந்­த­மைக்கும் அதற்கு முன் தினம் அஸ்­கி­ரிய பீடத்தின் அறிக்கை வெளி­யி­டப்­பட்­ட­மையும் இந்த இன­வாத சூழ­லா­னது மிகப் பாரிய அளவில் திட்­ட­மிட்டு கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டதா எனும் சந்­தே­கத்தை வலுக்கச் செய்­வ­தா­க­வுள்­ளது. 

இன்று அர­சி­யல்­வா­தி­களும் பொலி­சாரும் இணைந்து நீதித்­து­றையை ஏமாற்றி, சட்­டத்தின் பார்­வையில் பெரும் குற்­ற­வா­ளி­யாகக் கரு­தப்­படும் ஞான­சார தேரரைப் பாது­காக்க முனைந்­தி­ருப்­ப­தா­னது சிறு­பான்மை மக்கள் மத்­தியில் பலத்த அச்­சத்தைத் தோற்­று­வித்­துள்­ள­துடன் எதிர்­கா­லத்­தையும் சூன்­ய­மாக்­கி­யுள்­ளது.

இந்தப் போக்கு எந்­த­வ­கை­யிலும் ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. என­வேதான் இந்தப் பிடி­யி­லி­ருந்து வெளி­வ­ரு­வ­தற்­கான உபாய மார்க்­கங்­களைக் கண்­ட­றிய வேண்­டி­யது சிறு­பான்மை சமூ­கங்­க­ளி­னதும் குறிப்­பாக நீதியை நியா­யத்தை மதிக்­கின்ற இந்த நாட்டின் சகல பிர­ஜை­க­ளி­னதும் கடப்­பா­டாகும்.

இந்தப் போராட்டத்தில்  நாம் அனைவரும் கைகோர்த்து எதிர்த்து நிற்காத வரை இலங்கையும் இன்னுமொரு மியன்மார் என்ற நிலைக்குச் செல்வது வெகுதூரத்திலில்லை. அல்லாஹ் அவ்வாறானதொரு நிலையை இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது என இந்தப் பெருநாள் தினங்களின் பிரார்த்திப்போமாக.  

வாசகர்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.

2 comments:

  1. நாட்டை அபிவிருத்தி செய்ய தடையாக இருப்பது இந்த தரித்திரியம் பிடிச்சவங்கள் தான்.இவங்களையே கும்புட்டுக்கொண்டு இருக்கவேண்டியது தான் மக்களுக்கு உணவு,உடை இன்னும் என்னன்னா தேவைகள் இருக்கிறதோ எல்லாம் மேலே இருந்து கீழே விழும்!

    ReplyDelete
  2. Inda arikkai asgiri pedettu teretgan koduthtgar enpadai urudi seiya edum vahal unda?????

    ReplyDelete

Powered by Blogger.