Header Ads



வீண் விரயம் செய்யாதீர்கள்


வீண் விரயம் செய்பவர்கள் மேலுள்ள புகைப்படத்தை பார்க்கவும். ஒரு நிமிடம் சிந்தியுங்கள். உங்களைப்படைத்த அல்லாஹ்தான் இவர்களையும் படைத்தான். வீண் விரயம் செய்வீர்களானால், இந்த குழந்தைக்கு கிடைத்துள்ள சொற்ப உணவு கூட மறுமையில் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். வீண் ஆடம்பரத்துக்காக, பெருமைக்காக வேறு எதற்காகவும் வீண் விரயம் செய்யாதீர்கள்.

மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் தொழுகைக்காக ''ஒளு'' செய்யும்போதுகூட தண்ணீரை வீண் விரயம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்காதபோது உணவுப்பொருள்களை வீண் விரயம் செய்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணருங்கள்.. அத்துடன் உலகில் கோடான கோடி மக்கள் பட்டினியால் வாடும்போது அல்லாஹ் உங்களுக்கு நிறைவான உணவை வழங்கியிருக்கும்போது அதனை வீண் விரயம் செய்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை உணருங்கள்.

No comments

Powered by Blogger.