மஹிந்தவை நாங்கள் அழைக்கவில்லை - கை விரித்தது ஜப்பான்
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவிற்கு ஜப்பான் உத்தியோகபூர்வ அழைப்பு எதனையும் விடுக்கவில்லை என்றும், அவர் தனிப்பட்ட முறையிலேயே அங்கு சென்றுள்ளார் என்றும் இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச உட்பட குழுவினருடன் ஜப்பானுக்கு 10 நாள் விஜயம் ஒன்றை நேற்று முந்தினம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாக சில செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதனை அறிந்த இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் அந்தச் செய்திக்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள தூதரகம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜப்பான் விஜயம் தனிப்பட்ட விஜயம் ஒன்று. அவருக்கு ஜப்பான் அரசின் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இதேவேளை, ஜப்பானில் ஓய்வெடுப்பதோடு, பல விகாரைகளுக்கு சென்று மத வழிப்பாடுகளில் ஈடுப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
HEMA PANSELA MA RASTHIYADU GAANAWA
ReplyDelete