மியன்மார் யுவதி, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை - உதவிசெய்ய தூதரகம் மறுப்பு
இலங்கையில் பொலிஸ் காரன் ஒருவனால் மயின்மார் யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என இலங்கையிலுள்ள மியன்மார் தூதரகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த யுவதி பொலிஸில் தனது மொழியில் வாக்குமூலம் வழங்க உதவுவதற்கும் மியன்மார் தூதரகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட யுவதியின் உறுவக்காரர் ஒருவர் மூலம் யுவதியிடமிருந்து வாக்குமூலத்தை பெறலாம் என நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
அதேநேரம் ரோஹின்யா மொழி அறிந்த ஒருவர் தேவை என ஜப்னா முஸ்லிம் இணையம் செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது நீதிபதி பாதிக்கப்பட்ட யுவதி வாக்குமூலத்தை தனது உறவினர் மூலம் வழங்கலாம் என அறிவித்துள்ளதால் மொழி பெயர்ப்பாளர் தேவையில்லை என மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்த ரோஹின்ய முஸ்லிம்களை மீண்டும் தமது நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு மியன்மார் தூதரகம் கோரியமையும், அவர்களுக்கு இலங்கையில் அடைக்கலம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்த ரோஹின்ய முஸ்லிம்களை மீண்டும் தமது நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு மியன்மார் தூதரகம் கோரியமையும், அவர்களுக்கு இலங்கையில் அடைக்கலம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மியன்மார் காட்டுமிராண்டிகளின் கைகளில் அங்கு சிக்கியிருந்தால் கற்பழித்தது மட்டுமன்றி கொத்திக்குதறி தீயிட்டுக் கொளுத்தியுமிருப்பர்.
ReplyDeleteதப்பிவந்த பிள்ளையை நம்ம பொலிஸ் கற்பழித்ததாகத்தானே கதை, இதைப்பற்றி அக்காட்டேரிகளின் தூதரக உதவியை நாடினால் அவர்கள் இதற்கு உதவுவார்களா?
மூதூர்விசயத்தில் தமிழருக்கு வழங்கிய அறிவுரையை நீர் பின்பற்ற. வேண்டும்.பொலீசாரீன் கீர்த்திக்கு பங்கம் ஏற்படுத்தவேண்டாம்.
ReplyDeleteகுமரா! ஒரு சிறு பந்தியின் உள்ளடக்கத்தையே வாசித்து கிரகிக்க முடியாதளவு படிப்பறிவுதான் இல்லாவிட்டாலும் பட்டறிவாவது உன்னிடம் இருக்குமென்று நான் எழுதியதற்காக நான் வெட்கப்படுகிறேன்.
Delete