விமானத்தில் பிறந்த குழந்தை: வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா பெண்டன் என்ற கர்ப்பிணிப் பெண் கடந்த வாரம் அங்குள்ள போர்ட் லாடெர்டேல் என்ற விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளார்.
விமானத்தில் பயணம் மேற்கொண்ட நேரத்தில் அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனக்கு வலி ஏற்படுவது குறித்து விமானத்தில் இருக்கும் பணிப் பெண்களிடம் கூறியுள்ளார்.
கிறிஸ்டினா பெண்டன் உடன் மருத்துவர் மற்றும் சேவிலியர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விமானபணிப்பெண்கள் செய்து கொடுத்துள்ளனர்.
அப்போது கிறிஸ்டினா பெண்டனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தைத் தொடர்ந்து, அருகிலிருக்கும் நியூ ஆர்லியன்ஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிரக்கப்பட்டது,
இது குறித்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவிக்கையில், தங்கள் விமானத்தில் கிறிஸ்டினா பெண்டன் பயணம் செய்த போது, அவருக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது.
இக்குழந்தை தங்கள் நிறுவன விமானத்தில் பிறந்ததால், அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக தங்கள் நிறுவன விமானத்தில் பயணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment