கத்தார் விவகாரம், சவூதியிலிருந்து ஒரு சகோதரரின் பார்வை
-Fahad Ahmed-
சவுதி-கத்தார் விவகாரமா இங்கே மாவீரர்கள் குமறிக்கொண்டு இருக்கிறார்கள்.
சவுதியின் செயல்பாடுகளை விமர்சிக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்தியாவில் மேடை போட்டு நாட்டின் பிரதமரையும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் கேள்வி கேட்க்கும் உரிமை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது.
பேச்சுரிமை எழுதுரிமை இந்தியா ஜனநாயத்தின் அடிப்படை உரிமை.
ஆனால் சவுதி சட்டப்படி இந்த நாட்டை பற்றி சாதாரண விபத்து செய்திகளை கூட பகிர கடும் நிபந்தனைகள் இருக்கு.
இணையத்தில் சவுதியை விமர்சிக்க கூடாது என கடும் சட்டம் உள்ளது.
சவுதியில் நுழையும் போதே இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தை ஏற்று தான் நுழைகிறோம்.
இந்நாட்டின் சட்டப்படி எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் வேறு நாடுகளில் இருந்து வந்தாலும் புர்கா அணிய வேண்டும் என்றால் அணிந்து தான் ஆகவேண்டும்.
போதை மருந்து கடத்தினாலோ வைத்திருந்தாலோ தலையை வெட்டு வதாய் இருந்தால் தலை கொடுத்து தான் ஆக வேண்டும்.
அதன் அடிப்படையில் சவுதியை விமர்சிப்பதாக இருந்தால் அந்த தண்டனையை ஏற்று தான் ஆக வேண்டும்.
இங்கே சவுதியின் அரசியல் விவகாரத்தில் தலையிடவோ சவுதியை பிறப்பிடமாக கொண்டோ நாம் நுழையவில்லை பிழைக்க வந்திருக்கின்றோம்.
இருபது லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள் அவர்களின் வாழ்வாதார பிரச்சினை குறித்து ஒவ்வொருவருக்கும் அக்கரை இருந்தால் வாய் மூடி இருக்கவும்.
ஒரு நான்கு பங்களா தேஷிகள் ஒரு பெண்ணை கற்பழித்ததால் ஒட்டுமொத்த பங்களாதேஷ் நாட்டின் மீதும் விசா தடை உத்தரவை பிறப்பித்து பல வருடங்கள் அதை நீடித்திருந்தது சவுதி. சமீபத்தில் தான் கடும் முயற்சிகளுக்கு பின் நீக்கப்பட்டது.
இங்கே இருந்துக்கொண்டு வீரம் பேசுகிறோம் என எவரேனும் கொந்தளித்து கொண்டு இருந்தால் நாளை இந்தியர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படவும் விசா தடை விதிக்கப்படவும் சவுதி அஞ்சாது என்பதை கருத்தில் கொள்ளவும்.
டிவிட்டரில் சவுதி குடிமகன் சவுதியை விமர்சித்தற்கே கைது செய்துள்ளது.
எம்பஸ்ஸியில் டிரான்ஸ்லேட்டர்கள் மூலம் சவுதியில் உள்ள வேறு நாட்டினரின் பதிவுகளும் தீவிரவமாக கண்காணிக்கப்படுகிறது.
சவுதி கத்தார் விவகாரம் ட்ரம் வந்து போன பிறகு நடந்தவை அல்ல, அதற்கு முன்பிலிருந்தே இருக்கிறது.
கத்தார் ஈரானை ஆதாரித்தும் மக்கா விபத்தை விமர்சித்தும் கடும் போக்கை கையாண்டது,
அதை குறித்து வருத்தம் தெரிவிக்கவும், மறுபரிசீலனை செய்யவும் சவுதி நேரம் கொடுத்தும் கத்தார் மதிக்கவில்லை.
அதே போல் பல ஆதாரங்களை சவுதி சமர்பித்து தான் பொருளாதார தடையை மேற்கொண்டது.
இந்த விவகாரமா தேவையில்லாமல் இங்கே பிழைக்க வந்தவர்கள் கருத்து சொல்கிறோம் என்கிற பெயரில் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
You don't know the reason for the rift. Just don't waste our time.
ReplyDeletePoor Fahad is worried about his daily bread .ok u keep quite.
ReplyDeleteLet's continue our discourse on Zionist colloborators.
குரஆனையம் ஹதீஸையும் இஸ்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு பஞ்சம் பிளைக்க வந்த வேலையை மட்டும் பாருங்கள் என்று நேரடியாகவே கூறியிருக்கலாமே...
ReplyDeleteசங்கதிக்கு இஸ்லாம் பற்றிய சங்கதியே தெரியவில்லை
ReplyDeleteSangazi ,
ReplyDeleteFahad has his own reasons and he is not that wrong.
Foreigners have no right to politics in many
countries and Saudi is top on the list ! Shortly
after Trump visit! Trump's first foreign visit was
blessed with money and politics to the US from
the custodians of Makka and Madina ,in the holy
month of Ramazan ! Islam at its peak ! After Iraq,
Afganistan ,Libya and Syria ! Ramazan ,is it a
month for unity or hostility ? Well, Saudis are
the owners of Quran and Hadiths!They know better.