Header Ads



பொதுபல சேனாவுடன் றோவும், சீ.ஐ.ஏ. யும் தொடர்பா..??

 -யு எச் ஹைதர் அலி-

Mahinda Regime Change - ஆட்சி மாற்றத்தோடு சீனாவை இலங்கையில் அகற்றலாம் என்று கனவு கண்ட இந்தியாவும் அமேரிக்காவும் ஏமாந்துவிட்டது. தற்போது இந்தியாவின் றோவும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ வும் இனைந்து அரசாங்கத்தை ஆட்டம் காட்ட முற்பட்டிருக்கிறது என்பதை அவதானிக்க முடிகிறது . றோவும் சி.ஐ.ஏ வும் ஞானசார போன்ற சில்லறைகளோடு நேரடியாக தொடர்பை வைக்காவிட்டாலும், பொதுபல சேனாவின் முக்கிய உறுப்பினரான கணனித்துறையில் கலாநிதி பட்டத்தை ரஷ்யாவில் பெற்ற டிலன்த விதானகே, போன்றவர்களோடு நேரடி தொடர்பை பேணுகின்றனர் என்பதே நிஜம் . இன்றைய இந்த சூழ் நிலையில் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் ஒருவேலை அவர் அரசின் சாட்சியாக மாறிவிடவும் வாய்ப்புள்ளது. ஏன் என்றால் ஞானசார தேரர் போன்றவர்கள் கடந்த காலங்களில் காலத்துக்கு காலம் நிறம் மாறியவர்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.
ஞானசார தேரர் போன்றவர்கள் இன்றைய சூழ் நிலையில் கைது செய்யப்பட்டால் உண்மைகள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தினால் 2020 இலங்கையின் தேர்தலை எதிர்நோக்க எதிர்பார்த்து இருக்கின்ற கடந்த அரசின் இராணுவ கூலிப்படைகளின் God Father கோட்டாபய ராஜபக்ஸ போன்றவர்கள், அவருடைய அவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாவை காப்பாற்ற மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நிதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச போன்ற கோட்டாவுக்கு மிகவும் நெருங்கியவர்களின் மூலம் ஞானசார தேரரரை பாதுகாக்கும் முயற்சிகள் ஒருபுறம் இடம்பெற்று வருகின்றன .
றோவுக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவருடைய இந்திய நெருக்கம் கடந்த காலங்களில் அவரது அமைச்சுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு பலப்படுத்தப்பட்டது , அமைச்சுப் பதவி ஏற்றதும் அவரது முதல் விஜயம் இந்தியாவாகவே இருந்தது.
மறுபுரம் அமேரிக்க தூதரகத்தோடு மிக நெருங்கிய உறவைப்பேனும் அசாத் சாலி ஒரு சாதாரன பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஒருமுறை கூட வகிக்காதவர். சாலி ஒரு சாதாரண பிரதி மேயர் மாத்திரமே , கடந்த மகிந்த ஆட்சி காலம் தொட்டே இவரை சீ ஐ ஏ இயக்கி வந்த விதம் இங்கு மிகவும் கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் .
மூஸ்லீம் சமூகத்தின் அனைது உட்பூசல்கலையும் , வஹ்ஹாபி சலபி வண்டவாளங்களை டிலன்த விதானகே ஊடாக பொது பலசேனாவுக்கு தாரை வார்த்ததும் அசாத் சாலியின் சகோதரர் ரியாஸ் சாலி என்பது நாம் அறிந்ததே. இவர் தான் ஸாகிர் நாஈக் அவர்களுடைய ஒரு பாடசாலை கொழும்பில் ஆரம்பிக்க இருந்ததை பலசேனாவின் மூலம் தடையை ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாருடைய அழைப்பின் மூலம் மேற்கு நாடுகளின் தூதுவர்கள் தெவட்டகஹ பள்ளியில் ஒன்று சேர்ந்தார்கள். ?
அசாத் சாலி ஊடகசந்திப்பின் போது இவ்வாறு கூறினார் மேற்கு நாடுகளின் தூதுவர்களின் வேண்டுதலுக்கு அமையவே நாம் இந்த கூட்டத்தை பள்ளிவாசலில் கூட்டினோம் என்று.
இலங்கை முஸ்லீம்கள் விரும்யோ விரும்பாமளோ இலங்கை முஸ்லிம்களின் நாம பிரதிநிதிகள் ACJU என்பதை அனைவரும் அறிவார்கள் . கடந்த காலங்களில் அமெரிக்க தூதுவர் பேட்ரிஸியா கூட முப்த்தி ரிஸ்வி அவர்களோடு தான் பேச்சுவார்த்தை நடத்தியதை நாம் அறிவோம். அப்படி இருக்க , இந்த தூதுவராளயகளின் தெவட்டகஹவுக்கான திடீர் விஜயம் சாதரன ஒரு விடயம் அல்ல. இந்த நிகழ்வுகளின் அரங்கேற்றத்தில் இருந்து ஒன்றுமட்டும் புரிகிறது.
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளும் அதற்கு எதிரான குரல்களின் இயக்குனரும் திரைக்கதை வசனமும் ஒரே திசையில் இருந்து வருகிறது என்பது மட்டும் நிச்சயம் .
இம்முறை இலங்கை முஸ்லீம்களுக்கு எதிராக இடம் பெற்ற சம்பவங்களுக்கு முஸ்லிம் தலைமைகளிடம் இருந்து எதிர்புக்குரல் எழுவதற்கு முன்பே கொழும்பு அமேரிக்க தூதரகம் கண்டித்து அறிக்கை விட்டதும் அவதானிக்கத்தக்கது .

3 comments:

  1. ஊகத்தில் உண்மையில்லாமல் இல்லை
    முழுச்செய்தியும் உண்மையல்ல

    ReplyDelete
  2. பொது பல சேனா எங்கு வேண்டுமானாலும் தொடர்பை வைக்கட்டும். நாம் வாக்களித்தது ஜனாதிபதிக்கே அவர் நாட்டின் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். பகிரங்கமாக குற்றமிழைப்போரைத் தண்டிக்காது எப்படி அடிமட்டத்திலே சட்டமத்தை நிலை நாட்டுவார்?

    ReplyDelete

Powered by Blogger.