Header Ads



அரபு நாடுகளுடன், கத்தார் விவகாரம் 'குடும்பப் பிரச்சினை' ஆகும் - அமெரிக்கா


வளைகுடா நாடுகள் மற்றும் கத்தாருக்கு இடையில் அதிகரிக்கும் பிரச்சனை, அவர்களுக்குள் நடக்கும் ''குடும்ப பிரச்சனை'' என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் பத்திரிகையாளர்களுடன் நடைபெற்ற உரையாடலின் போது, வெள்ளை மாளிகை செய்திதொடர்பாளர் சீயன் ஸ்பைசர் இந்த கருத்தை தெரிவித்தார்.

சௌதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள், கத்தார் மீது, விதித்துள்ள கண்டிப்பான தடையை விலக்கவேண்டுமெனில், அவர்கள் விதித்துள்ள 13 கட்டுப்பாடுகளை ஒப்புக்கொள்ளவேண்டும் என்ற நிலை உள்ளது.

அந்த கட்டுப்பாடுகளில் ஒன்று கத்தார் அல்ஜஸிரா செய்தி ஒளிபரப்பின் ஒட்டுமொத்த தொகுப்பையும் மூடவேண்டும், இரானுடன் உள்ள தொடர்பை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதும் அடங்கும்.

கத்தார் மீது தடை விதித்துள்ள அனைத்து அரபு நாடுகளும் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. ஆனால், வெள்ளிக்கிழமையன்று அந்த நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள நிபந்தனை குறித்து, அமெரிக்காவின் வெளியுறவு துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன், அதிகாரப்பூர்வ அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை.

''இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ள நான்கு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டிருப்பது குடும்ப பிரச்சனை. அதை அவர்களாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நாம் நம்புவோம்,'' என்றார் ஸ்பைசர்.

''அவர்களுக்குள் நடக்கவேண்டிய கலந்துரையாடலை நடத்திவைக்க வேண்டியிருந்தால், அதை செய்யலாம். அவர்களுக்கு தேவைப்பட்டால், அவர்களாவே தீர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

வெள்ளியன்று இந்த விவகாரம் தொடர்பாக டில்லர்சன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சௌதி அரேபியா மற்றும் அதன் நட்பு நாடுகளான பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை, தடையை விலக்க கட்டுப்பாடுகள் அடங்கிய பட்டியலை கத்தாரிடம் அளிப்பார்கள் என்று இதற்கு முன்னர் டில்லர்சன் எதிர்பார்த்தார்.

6 comments:

  1. அரேபிய நாடுகளில் மாறி மாறி எப்போவும் குடும்ப பிரச்சனைகள் தானே. பின்னர் எண்ணெயை விற்ற காசில் ஆயுதங்களை வாங்கி தங்களுக்குள் அடிபட்டு சாவார்கள். எப்போ திருத்துவார்கள்?.

    இப்போ கட்டார் திருத்துவதை துருக்கி விரும்புவதாக இல்லை.

    ISIS யின் கட்டுப்பாட்டில் சிரியா இருந்த போது, துருக்கி யினூடாகவே ISIS எண்ணெயை கடந்தி விற்றார்கள். எனவே துருக்கியும் ISIS யின் ஒரு ஆதரவாளர் என்பதால், அடுத்த தடை தங்களுக்கு தான் என துருக்கி பயன்படுகிறது போலும்.

    ReplyDelete
  2. Very subtle move by Washington to set one brother Arab country against another .
    Saudi simply gulped it down becoming laughing stock in the eyes of the world.
    Saudi's image as leading saviour of Umma gone to dogs.
    Savior turning traitor .Retaining corrupted monarchy is main priority than Islamic renaisssance .

    ReplyDelete
  3. மிகக் கவனமாக கையாள வேண்டிய விடய்ம்...
    எனக்கு மிக நன்றாக ஞாபகம் இருக்கிறது, வளைகுடாவில் குவைத்துக்கும் ஈராக்குக்கும் எண்ணெய் வயல் தொடர்பான முறுகல் தோன்றிய போது இதே கருத்தை தான் அமெரிக்கா முன் வைத்தது....
    ஆனால் ஈராக்கை நாசமாக்க தேவையான அனைத்தையும் பின் புலத்தில் செய்து கொள்ள இப்பிரச்சினையை பயன் படுத்திக் கொண்டது...
    இம்முறை target எந்த நாடோ?....

    ReplyDelete
    Replies
    1. இதன் target துருக்கி தான். துருக்கியை வம்புக்கு இழுக்க பயன்படுத்தபடும் தூண்டில் இரை தான் கட்டார்.

      இதில் துருக்கி தலையிடுவதனூடாக மற்றைய ஆரேபிய நாடுகளுடன் பகை ஏற்படுத்தபட்டு தனிமை படுத்தப்படும். பின்னர் easy target தானே.

      துருக்கிக்கும் அமேரிகாவுக்கும் உள்ள உறவில் பெரும் விரிசல். துருக்கி யின் ராணுவ புரட்சிக்கு அமேரிக்கா தான் காரணம் எனவும், புரட்சியின் master planner தற்போது அமேரிக்காவில் அடைகலம் பெற்றுள்ளார் எனவும் ஏர்தூகான் குற்றம் சாட்டி வருகிறார்.

      துருக்கி யின் தற்போதைய வளர்ச்சி அமேரிக்காவின் மத்திய கிழக்கு
      பிரதேசத்தின் ஆதிக்கத்திற்கு இடைஞ்சல். சிரியா விடயத்திலும் அமேரிக்கா வுக்கு எதிராக துருக்கி தலையிட்டது.

      Delete

Powered by Blogger.