ரணிலின் உடல் நலத்திற்காக, மைத்திரிபால பிரார்த்தனை
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உடல் நலத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரார்த்தனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
வைத்திய சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர், மெரிலண்ட் ஜோன் ஹொப்கின்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிசிக்சை நிறைவடைந்துள்ள நிலையில் பிரதமர் அங்கிருந்து நேற்று வெளியேறியுள்ளார்.
இதேவேளை, பிரதமரின் நலன் வேண்டி ஆசிர்வாத பூஜை ஒன்று கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டுள்ளார்.
பூஜை வழிபாட்டினை ஐக்கிய தேசிய கட்சியின் இளம் தொழிலாளர் அமைப்பு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமரின் நலன் வேண்டி பிராத்தனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment