Header Ads



உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் : பைசர் முஸ்தபா

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நட வடிக்கைகளும் பூர்த்தியாகி விட்டன. இதன்படி வெகுவிரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகுமாறு உள்ளூராட்சி மற்றும் மாகாண  அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

2012 இன் 22 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்களுக்கான திருத்த சட்டமூல வரைபு நேற்று தேர்தல் ஆணைக்குழுவின் செயலா ளருக்கு கையளிக்கப்பட்டது. வரைபு கையளிக்கப்பட்டதன் பின் னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு என் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது. உள்ளூராட்சிமன்ற எல்லை நிர்ணய செயற்பாடுகளில் முரண்பாடுகள் காணப்பட்டதால் அதில் திருத்தம் செய்வதற்கு எமக்கு காலம் தேவைப்பட்டது. 

இந்நிலையில் தற்போது திருத்தம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலை நாம் வெளியிட்டு விட்டோம். தேர்தலை பிற்போடு வதற்கு அரசாங்கத்திற்கு எந்தவொரு நோக்கமும் கிடையாது. தேர்தல் முறைமை தொடர்பில் ஒரு சில பிரச்சினைகள் மாத்திரம் காணப்பட்டன. இது பேசு பொருளாக இருந்தது. எனினும் புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக உள்ளார். ஏனெனில் புதிய தேர்தல் முறைமைக்கு மக்களின் ஆணை கிடைக்கப்பெற்றுள்ளது என்றார்.

2 comments:

  1. WHERE IS OUR HONORABLE ONE & ONLY LEADER.... RAUF HAKEEM???
    ASK HIM TO GET READY FOR GO AROUND SRI LANKA MUSLIM AREAS TO TEMPER THE FIGHTERS (FOR NOTHING) WITH "NAARE THAQBEER! ALLAH AKBAR!"

    ReplyDelete
  2. வட்டாரமுறையிலேயே உள்ளாட்சி தேர்தல்கள் நடை பெறும்.

    ReplyDelete

Powered by Blogger.