ஞானசாரரர் கைது, தாமதிக்கப்படுவது ஏன்..?
-எஸ்.றிபான்-
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்கு பொலிஸார் வலை விரித்துத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர் தலைமறைவாகியுள்ளார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால்தான் அவர் ஒளிந்துள்ளதாகவும் பொதுபல சேனா தெரிவித்துள்ளது. இதேவேளை, ஞானசார தேரர் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார். மேலும், அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு ஆஜராகாதும் உள்ளார்.
இந்த வழக்கு 31.05.2017 புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஞானசார தேரர் சமுகமளிக்கவில்லை. அவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஞானசார தேரர் பற்றிய முரண்பாடான கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு ஞானசார தேரர் பற்றி தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களை பார்க்கின்ற போது அவர் திட்டமிடப்பட்ட வகையில் பாதுகாக்கப்படுகின்றார் என்பது தெளிவாகின்றது. பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்தமை, வாக்கு மூலம் பெறுவதற்காக பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்தமை என பல குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே ஞானசார தேரரை கைது செய்வதற்கு பொலிஸார் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த 25.05.2017 திகதி பொலிஸார் முன்வைத்த இக்குற்றச்சாட்டுக்களின் பின்னர் ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளார். இவரைக் கைது செய்வதற்காக விசேடமாக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆயினும், இப்பத்தி எழுதும் வரையில் அவர் கைது செய்யப்படவில்லை.
இலங்கை புலனாய்வுப் பிரிவு மிகவும் சக்தி வாய்ந்ததாகும். விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் தலைவர்களின் நடமாட்டங்களையும், திட்டங்களையும் துல்லியமாக இலங்கை புலனாய்வுப் பிரிவு தெரிந்து வைத்திருந்தது.
இதனால்தான், அவ்வியக்கத்தை முற்றாக அழித்து விட முடிந்துள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடந்தவற்றையே அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற புலனாய்வுப் பிரிவினால் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைந்துள்ள இடத்தினை அறிந்து கொள்வது என்பது கடினமான காரியமாக இருக்காது. ஆதலால், ஞானசார தேரரை கைது செய்வதில் அதிகாரம் கொண்ட மறைமுகக் கரங்களின் தலையீடுகள் இருக்கலாமென்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
ஞானசார தேரரை கைது செய்வதற்கு பொலிஸார் தேடிக் கொண்டிருக்கும் அதேவேளை, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பொலிஸார் கொழும்பு நீதிவான் மன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஞானசாரரை கைது செய்து சிறையில் அடைக்கும் பட்சத்தில் அவரை சிறையில் வைத்தே கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுபல சேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பிரிவு பொலிஸார் நீதிமன்றத்தில் ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்படுகின்றவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு இருக்கின்றது. கைது செய்யப்படுகின்றவருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதென்றால் அதற்கேற்றவாறு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஞானசார தேரர் கைது செய்யப்படும் பட்சத்தில் அவரது உயிருக்கு ஆபத்துள்ளதென்று தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டாளருக்கு ஞானசார தேரரின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தினை வழங்க வேண்டியதும் பொலிஸாரின் பொறுப்பாகும்.
2015 ஆம் ஆண்டு மேற்படி விடயம் தொடர்பாக கைதி ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதிய கடிதமொன்றில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில் கொலை செய்ய சதி த்திட்டம் தீட்டப்பட்டுள்ளதென்று கடிதம் எழுதியுள்ள குறிப்பிட்ட கைதிக்கு சதித்திட்டம் பற்றி தெரிந்துள்ளது. அதனால்தான் அவர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், ஞானசார தேரர் தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளமையால்தான் தலைமறைவாகியுள்ளார் என்று அந்த அமைப்பினரே தெரிவிக்கின்றார்கள். அப்படியாயின் அவர் எங்குள்ளார் என்பது அந்த அமைப்பினருக்கும் தெரியும் என்பதில் சந்தேகம் கொள்ள முடியாதென்று நினைக்கின்றேன்.
மேலும், தலைமறைவாகியுள்ள ஞானசார தேரர் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்கியுள்ளார். இன்றைய நவீன யுகத்தில் ஒரு சிறு தகவலை வைத்துக் கொண்டே அவர் எங்குள்ளார் என்று கண்டு பிடிக்க முடியும். ஆனால், ஞானசார தேரர் ஊடகங்களுக்கு வெள்ள அனர்த்தம் பற்றியதொரு அறிக்கையை வழங்கியுள்ளார். இந்த அறிக்கை ஒன்றே போதும் அவர் மறைந்துள்ள இடத்தினை கண்டுபிடிப்பதற்கு. ஆனால், எதுவும் நடைபெறவில்லை.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் 31.05.2017 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார் என்று ஞானசார தேரரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். அமைச்சர் ஒருவருக்கு எதிராக வழக்கொன்றின் போது குறிப்பிட்ட அமைச்சர் சுகவீனத்தைக் காரணம் காட்டி நீதிமன்றத்திற்கு சமுகமளிக்கவில்லை. ஆயினும், அவரை வைத்தியசாலையில் வைத்தே பொலிஸார் கைது செய்தார் என்பது குறிப்பிடத்தக்து.
எனவே, இவற்றின் அடிப்படையில் ஞானசார தேரர் திட்டமிடப்பட்ட வகையில் பாதுகாக்கப்படுகின்றார் என்று தெரிகின்றது.
தயவு செய்து முஸ்லீம் அனைவரும் தங்களின் துஆவில் நமது சமூகத்தின் பாதுகாப்பையும் சேர்த்துக்கொள்ளவும், முஸ்லிம்களின் ஆயுதம் துஆதான்!
ReplyDeletePeace Lankan ,
ReplyDeletePalestineththil,Syriyavil,Iraqil,Afganil ketkaaza
Duawagap parththu kelungal !
UNNAICH CHOLLIK KUTRAMILLAI , ENNAICH CHOLLIK
KUTRAMILLAI ! KAALAM CHEIZA KOALAMADI KADAVUL
SEIZA KUTRAMADI KADAVUL SEIZA KUTRAMADI .
Yes true
ReplyDelete