ஞானசாரரை கைதுசெய்ய முடியாமல் போனமை, எங்கள் இயலாமையே - பொலிஸ் பேச்சாளர்
பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய முடியாமல் போனமைக்கு தங்கள் இயலாமையை ஏற்றுக் கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த தேரர் தொடர்ந்து தலைமறைவாகி வந்த நிலையில் இன்று காலை கொழும்பு கோட்டை நீதிமன்றில் சரணடைந்தார்.
அதன்பின்னர் ஞானசார தேரர் புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
அவரிடம் வாக்குமூம் பெற்று நீதிமன்றில் ஒப்படைத்த பொலிஸார் பிணை வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதுடன், இது குறித்து நீதிபதி கடும் விசனம் வெளியிட்டதுடன் பொலிஸாரைக் கடிந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடகம் சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் நமபமாட்டார்.
ReplyDeleteகுடிமக்களின் பாதுக்காப்பு இன்றியமையாதவொன்று அதை சரிவர செய்ய முடியாத பொலிஸ் தலைமையகம் மீது இனி யாருக்கும் நம்பிக்கையில்லை எனவே பொலிஸ் தலைமை அதிகாரியை உடனடியாக பதவி விலகவைக்க வேண்டும்.
ReplyDeleteஶ்ரீலஙகாவுல என்னப்பா நட(டி)க்குது. சாதாரண பாமரமக்கள் இத்தகைய செய்திகளை தொகுத்துப்படிப்பார்களாயின் தலையைப்பிய்த்துக்கொள்வார்கள்.
ReplyDeleteஅன்பான முஸ்லிம் சகோதரர்களே! நோன்பின் இறுதிப் பத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் மஸ்ஜிதுகளில் கூட்டாகவும் நள்ளிரவில் தனித்தும் ஏக இறைவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக மன்றாட்டமாக சுஜூதில்விழுந்து அழுது துஆ கேளுங்கள்.
இவர்கள் அத்தனை பேரதும் சூழ்ச்சியை அவன் முறியடிப்பான். இன்ஷாஅல்லாஹ்!
Well planned action
ReplyDelete