முஸ்லிம்களுக்கு எனது, நல்வாழ்த்துகள் - ஜனாதிபதி மைத்ரிபால
ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தி
பௌதீக வளங்கள் மீது அளவுகடந்த பேராசையைக் கொண்டுள்ள நவீன மனிதன் திருப்தியற்ற பயணத்தையே மேற்கொண்டுள்ளான். மக்கள் மத்தியில் பிளவுகளைத் தோற்றுவித்து, அமைதியின்மையை ஏற்படுத்தி, நம்பிக்கையீனத்தை பரப்பவே அழிவை உண்டாக்கும் இந்த இருப்பு காரணமாக உள்ளது.
உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்கள் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் ரமழான் மாதத்தில் கடைபிடித்துவரும் பரஸ்பர கௌரவம், சமத்துவம், ஈகை மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் போன்ற பண்புகள் மனிதனது விடுதலை சுயநலத்திலன்றி பிறர் நலம் பேணுவதிலேயே தங்கியுள்ளது என்பதையே வெளிப்படுத்துகின்றன.
அந்தவகையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளின் மூலம் முழு மனித சமூகத்திற்கும் விடுக்கப்படும் முக்கிய செய்தி பிரபஞ்ச சமத்துவம் என்பதாகும். சமய, ஆன்மீக மற்றும் சமூக பெறுமானங்களின் அடிப்படையில் எல்லாவற்றிலும் சமத்துவத்தைப் பேணுவதே அதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்தவர்களது கஷ்டங்களைப் புரிந்துகொள்வதுடன், தமக்குத் தாம் நேர்மையாக இருப்பதனால் மனிதம் வளம்பெறும் என்பதை ரமழான் நோன்பு எமக்கு நினைவுபடுத்துகிறது.
சமய எல்லைகளைக் கடந்து பொது மானிடத்தை இலக்காகக் கொண்ட இத்தகைய வளமான தொலைநோக்குடைய ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மைத்ரிபால சிறிசேன
இவைகளை தெரிந்து இருந்து கொண்டுதானா முஸ்லிம்கள் உங்களின் இனவாதிகளால் தாக்கப்படும்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தீர்கள் கௌவரவ ஜனாதிபதி அவர்களே?
ReplyDelete