Header Ads



''பள்ளிவாசல்களுக்குள் வெளிநாட்டு தூதர்களை, அழைப்பதை நிறுத்த வேண்டும்''

இஸ்லாமிய வணக்கஸ்தலங்களை விடுதிகளின், ஹோட்டல்களின் நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் என தான்அஸாத் சாலி உள்ளிட்டவர்களிடம் வினயமாக கேட்டுக்கொள்வதாக பானதுறை பிரதேச சபையின்  முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..

நேற்று முன்தினம்  மாலை ஏழு நாடுகளின் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் தெவட்டகஹ        பள்ளிவாயலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தாக ஊடகங்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன்.  பொதுபல சேனாவை உருவாக்கியதாக இவர்கள் கூறிய நோர்வே உள்ளிட்டவர்களிடம் முஸ்லிம்களுக்கு நீதி கேட்டுபோன விடயம் தொடர்பில் நேற்றையை தினம் பாராளுமன்ற உறுப்பினர்  டீ வி சானக்க வெளியிட்டஅறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால்  நான் அந்த விடயத்தை மீண்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்பவவில்லை.

அதே நேரம் இஸ்லாமியர்கள் என்ற வகையில் தெவடகஹா பள்ளிவாயலில் இடம்பெற்ற அந்த  சந்திப்பு தொடர்பில்எனக்கி உடன்பாடு இல்லை என்பதை ஊடக சக்கரவர்த்தி அஸாத் சாலிக்கு உள்ளிட்டவர்களுக்கு நான்சொல்லிவைக்க விரும்புகிறேன்.  முஸ்லிம்களாகிய எமது உதவி தேடல்கள் ,முயற்சிகள் என்பன இறைவன் அனுமதித்துள்ள பிரகாரமே  அமையவேண்டும். அப்போது தான் இறைவனின் உதவியை பெற்றுக்கொள்ளலாம். மாறாக அல்லாஹ் அனுமதிக்காத பிரகாரம்  எமது முயற்சிகளை செய்யும் போது உதவுபவனின் உதவிக்கு பகரமாக சாபமே           மக்களை வந்து சேரும்.

குறிப்பாக இந்த சந்திப்புக்கு வந்திருந்த சில தூதுவர்கள் எமது சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஆடைகளில் அங்கு பிரசன்னமாகியிருந்த (அவர்களில் உடைகளில் எமக்கு குறைகாண முடியாது. அது அவர்களின் கலாசாரம். அவர்களின் சுதந்திரம் ) போட்டோக்களை சில சகோதரர்கள் சமூக வலைகளில்  பதிவிட்டுள்ளமையை காணக்கிடைத்தது. இது இஸ்லாத்துக்கு முரணான செயலாகும். பள்ளிவாயலில் இப்படியான ஒரு நிகழ்வை நடத்துவதால் ஒரு போதும் இறைவனின் அருளை பெற முடியாது. இறைவன் அனுமதிக்காத மற்றும் விரும்பாத ஒரு செயலை பள்ளிவாயலில் செய்தமையால் பள்ளிவாயலின் புனிதம் தான் கெட்டுள்ளது. முதலில் அசாத்சாலி தூய இஸ்லாத்தை கற்க வேண்டும். அண்மையில் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபரின் மனைவி மிகவும் கண்ணியமான முறையில் ஆடை அணிந்தே சென்றிருந்தார். குறிப்பாக இந்த விடயத்தை பள்ளிவாயலுக்குள் அரைகுறை ஆடை அணிந்தவர்களை அழைத்து வந்த அசாத் சாலியும் அரைகுறை ஆடை அணிந்து வந்தவர்களும்  முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.

இது போன்ற சந்திப்புக்கள் பள்ளிவாயலுக்கு உள்ளே நடப்பதை நாம் வரலாற்றில் கண்டதில்லை.அப்படியே அஸாத் சாலிக்கு இதுபோன்ற சந்திப்புக்களை நடத்தவேண்டிய தேவை ஒன்று இருந்தால் அதனை ஹோட்டல் ஒன்றிலோ அல்லது வேறு ஒரு தனி இடத்திலோ நடத்தியிருக்கலாம் அதனை விடுத்து பள்ளிவால் ஒன்றிற்குள்இஸ்லாம் அனுமதிக்காத  ஆடைகளுடன் பெண்களை கூட்டிவந்து கலந்துரையாடல் நடத்தியுள்ளமையை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

இதுபோன்ற விடயங்களில் அஸாத் சாலி போன்றவர்கள் இன்னும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனதான் கேட்டுக்கொள்வதாக அவர் அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

13 comments:

  1. There is good point in this article..
    They have their freedom and when they come to mosques they should respect our culture and our faith.
    Why did he invite them into mosque?
    Why not he invited only Muslim diplomatic ? Why non Muslim are invited to this holy place?.it's ok if it is done with Islamic ethics

    ReplyDelete
  2. Atteq,

    We should ask Azad Sally for his side of the story.
    I have a question here ! Is it worst than petrol
    bomb attack ? Is it worst than pork thrown into
    mosques in London ? The situation could have been
    embarrassing even to Azad Sally . You are right to
    expect from a diplomat the due respect at a
    religious place . Better to wait for Sally's story.

    ReplyDelete
  3. Thehatagaha mosque is not a original masjidj... its asath saly's shirk place . He would bring even naked. Bcose... he is not a original muslim. He is a game player.

    ReplyDelete
  4. ஆசாத் சாலியின் குல தெவ்வப்பள்ளிதான் தெமடகஹா பள்ளி அது ஷிர்க்கின் ஒரு பகுதியால் அலங்கரிக்கப்பட்டது,இந்தப் பிரச்சினை அனைத்துக்கும் காரணம் ஆரம்பத்தில் யார் உண்மையாக முஸ்லீம்களை பல சேனாவுக்கு காட்டிக் கொடுத்த பெருமை இவரைத்தான் சேரும்,தன் பல்லை குத்தி மற்றவர்களுக்கு நாற்றத்தை கொடுத்தவரும் இவர்தான்

    ReplyDelete
  5. Can you call this loud mouthed Muslim politician a MUSLIM.
    He is NOT second to Gnanasara Thero of the BBS. What NOT has he done what Gnanasara Thero has done? His press conference statements about Gnanasara Thero is another "political stage drama" conducted to hoodwink the poor Muslim community. It is like the SOUND OF AN EMPTY VESSEL - just like the "MOUTH OF GNANASARA THERO. His political stunts/pranks were NOT tolerated by PM Ranil Wickremesinghe and he was chased away from the UNP recently. Now he has found his way to the President's House. When President Maithripala Sirisena came to know about his political deception, he has been driven away from the Presidents residence, it is rumoured. He was in the centre of activities in the Haji pilgrimage quota allocations in 2010, where he screwed all the "Hajaathikals" thousands of rupees as a special levy that became a big scandal. He drove a "wedge" between the late Alavi Moulana and Minister Fowzi then in order to gain his dishonest goals. Just during the run-up to the Presidential Elections, he back-stabbed former Mahinda Rajapaksa, was found fault, but escaped begging pardon. It is remoured that he is suspected of having close links with the Indian RAW secret service agency.His loud noises about Muslims boycotting President's Ifthar and PM's Ifthar is a BIG BLUFF during Ramadan fasting 2016. Muslims should begin to ignore this "SATAN" in the Muslim Community.He is the BIGGEST SATAN to the Muslim Community. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any above challenges politically through RIGHTFUL legislations adopted in our favour in the coming future, Insha Allah. It is by only expressing and showing our political strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or idealogy, but emerging as a “NEW POLITICAL FORCE”, we will stand to gain what we are loosing, INSHA ALLAH.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  6. நீங்கள் எல்லோருமே அரசியலில் (அ)சிங்கங்கள் தான். ஆனால் இஸ்லாமிய அரசியலில் பள்ளிகளின் வகிபாகம் மிகக் காத்திரமானது. உலகத்தை ஆட்சி செய்த ஆரம்ப இஸ்லாமிய தலைவர்களின் ஜனாதிபதி மாளிகை மஸ்ஜிதுன் நபவிதான். ஆனால் பள்ளிகள் தொடர்பாக உங்களது பார்வையும் பயன்பாடும்?

    ReplyDelete
  7. ஸுஜூத் செய்யும் இடத்தில் இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

    ReplyDelete
  8. பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் will be going for a brain surgery.

    ReplyDelete
  9. ஏன் அவருக்கு மட்டும் அது தீட்டாகிடுமா?

    அது என்ன தீட்டு உண்டாக கோவிலா ?

    இவர் போன்ற முட்டாள்களின் கதைகளை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு

    தராளமாக வெளிநாட்டு தூதுவர்களை பள்ளிவாசல்களில் அழையுங்கள் இஸ்லாத்தில் அல்லாஹ் அதை அப்படி தடை செய்யவில்லை

    ReplyDelete
  10. சுஜூது செய்யும் உற்பள்ளியில் அறைகுறையுடன் அனுமதிப்பதை சரிகாண்பவர்கள் சுஜூது செய்யும் இடம் தொடர்பான குர்ஆனிய வசனம் ,இஸ்லாமியப் பார்வை என்பவற்றை கேட்டறிந்துவிட்டு பள்ளிவாசல்களின் வகிபாகம் பற்றி பேசுங்கள்.

    ReplyDelete
  11. தொழுகையை தொழ பள்ளிவாசல் தான் வேண்டும் என்று சட்டம் கிடையாது

    அது வீதியின் ஓரமாக இருந்தாலும் சரி புள்வெளியாக இருந்தாலும் சரியே

    அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு தொழ முடியும்

    அதன் அருகில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் இருந்தாலும் அதற்கு இஸ்லாத்தில் தடை கிடையாது

    இஸ்லாம் பற்றி அறிவு இல்லாமல் இங்கே சிலர் இஸ்லாம் பற்றி பேசுவதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது

    ReplyDelete
  12. பள்ளிவாசல்களினுள் அறைகுறை ஆடையுடன் அனுமதிப்பது பொருத்தமானதல்ல என்ற விடயத்தை சுட்டிக்காட்டும் போது தொழுவதற்கு பூமியில் எங்கும் அனுமதி கொடுக்கப்பட்டது என்பதற்காக பள்ளிவாயலக்குச் சமனாக ஏனைய பகுதிகள் ஆகிவிட முடியுமா? இச்சிறிய வேறுபாடு புரியாமல் அடுத்தவர்களின் மார்க்க அறிவை அளவீடு செய்வது அழகல்ல

    ReplyDelete
  13. பள்ளிவாசல்தான் இந்த உம்மாவின் கேந்திரஸ்தானமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய சிந்தனை.ஆனால் கேந்திரஸ்தானம் என்பது சுஜூது செய்யும் இடத்தில் அறைகுறையுடன் இருப்பதை ஆமோதிப்பதல்ல. குறித்த ஒழுக்கங்களை அறிவுறுத்தி(அமேரிக்க முதற்பெண்மணி குறைந்தபட்ச ஆடை ஒழுக்கங்களைப் பேணித்தான் சவுதி சென்றார்) அதையெல்லாம் அதன் வெளிப்பகுதியில் வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் .

    ReplyDelete

Powered by Blogger.