Header Ads



சுவிட்சர்லாந்து நாட்டு கிராமத்தில், அமுலாகியுள்ள வினோதமான சட்டம்


சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் மக்கள் ஒரு வினோதமான சட்டத்தை அமுலாக்கியுள்ளது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து நாடு திகழ்ந்து வருகிறது.

பனிமலைகள், பசுமையான புல்வெளிகள், குளிர்ச்சியான நீரோட்டங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களை சுவிட்சர்லாந்து கொண்டுள்ளது.

சுவிஸில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு பெருமை இருப்பது போல் Graubunden மாகாணத்திற்கும் ஒரு பெருமை உள்ளது.

இம்மாகாணத்திலேயே Bergun/Bravuogn என்ற கிராமம் தான் இயற்கையான சூழல் கொண்ட மிகவும் அழகிய கிராமம் ஆகும்.

இதனால் இக்கிராமத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த இயற்கை காட்சிகளை புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பெருமையுடன் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், இதற்கு எதிராக இக்கிராம மக்கள் ஒரு அதிரடி சட்டத்தை கடந்த திங்கள் அன்று அறிமுகப்படுத்தியுள்ளனர். இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இப்புதிய சட்டத்தின்படி, இக்கிராமத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுக் குறித்து மேயரான Peter Nicolay என்பவர் பேசுகையில், ‘கிராமத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சியை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.

இப்புகைப்படங்களை பார்க்கும் நபர்கள் ‘அடடா...இதுப்போன்ற ஒரு அழகான கிராமத்திற்கு நேரில் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கமும் ஏமாற்றமும் ஏற்படும்.

இதுபோன்ற வருத்தத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்பதால் இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்’ என விளக்கமளித்துள்ளார்.

மேலும், இச்சட்டத்தை மீறி புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தலா 5 பிராங் அபாரதமும் விதிக்கபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.