Header Ads



ஞானசாரா பற்றி, அரசு மௌனம் - ஜனாதிபதியிடம் ரிஸ்வி முப்தி முறைப்பாடு

-ARA.Fareel-

நாட்டில் இனங்கள் மற்றும் மதங்­க­ளி­டையே முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளமை குறித்து நேற்­றைய தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­ப­தியின் தலை­மையில் நடை­பெற்ற இக் கூட்­டத்தில் முஸ்லிம் அமைச்­சர்­களும் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை பிர­தி­நி­தி­களும் நாட்டில் சம­கா­லத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­களை விளக்கி அவற்­றுக்கு உடன் நட­வ­டிக்­கை­களைக் கோரி­னார்கள்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஞான­சார தேரரே மிகத் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கிறார். ஆனால் அவ­ருக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அரசு மௌனம் காக்­கி­றது. கடந்த கால அர­சாங்­கத்தில் உலமா சபை ஞான­சார தேர­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. ஆனால் பலன் ஏற்­ப­ட­வில்லை.

அவர் வீதியில் இறங்கி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் இஸ்­லாத்­துக்கு எதி­ரா­கவும் விமர்­ச­னங்­களை வெளி­யி­டு­வ­தற்கு ஒரு முற்­றுப்­புள்ளி வையுங்கள் என அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி ஜனா­தி­ப­தியை  வேண்டிக் கொண்டார்.

நாம் இவ்­வி­டத்­துக்கு தீர்­வொன்­றினை நாடியே வந்­துள்ளோம். தீர்வே எமக்கு முக்­கியம். பேச்­சு­வார்த்­தைகள் நடத்திக் கொண்­டி­ருப்­பதில் பய­னில்லை என்றும் அவர் ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்துக் கூறினார்.

முஸ்­லிம்­க­ளா­கிய நாம் பிக்­கு­மார்­களை கண்­ணி­யப்­ப­டுத்­து­கிறோம். அவர்கள் நம்­ப­கத்­தன்­மை­யுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஞான­சார தேரர் ஏன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இவ்­வாறு செயற்­ப­டு­கிறார். அவரை அழைத்து அவ­ரிடம் இது பற்றிக் கேளுங்கள். முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வொன்று பெற்­றுத்­தா­ருங்கள் என்றும் அஷ்­ஷெய்க் ரிஸ்வி முப்தி ஜனா­தி­ப­தி­யிடம் வேண்­டிக்­கொண்டார்.

நேற்று மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­ப­தியின் தலை­மையில் நடை­பெற்ற கலந்துரையாடலி­லேயே ரிஸ்வி முப்தி இவ்­வாறு தெரி­வித்தார்.

தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ, புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மற்றும் இந்­து­ச­மய விவ­கார அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், சுற்­று­லாத்­துறை அபி­வி­ருத்தி, கிறிஸ்­தவ சமய விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க ஆகிய சமய விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், அமைச்­சர்­க­ளான எம்.எச்.ஏ.ஹலீம், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், பைசர் முஸ்­தபா, ரிஷாத் பதி­யுதீன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரும் நாட்டில் தொடர்ந்து இடம்­பெற்­று­வரும் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்கள் , முஸ்லிம் வர்த்­தக நிலைய தாக்­குதல்கள் தொடர்பில் தங்கள் கண்­ட­னங்­களை வெளி­யிட்­டனர்.

5 comments:

  1. நேரமும் காலமும் வீனடுக்கும் வேலைதான் இது பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்துக்கு ஒரு பயங்கரவாதியை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்.இந்த நாட்டில் எந்த ஆட்சி நடக்கின்றது.இப்படியே ஏமாற்றிக்கொண்டு போனால் இதன் முடிவு என்ன?கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்ப்படுத்திய அநியாயங்களை மறக்கடிக்கும் விதமாக புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கி முஸ்லிம்கள் கருவருக்கப்படுகின்றார்கள்.தற்போது முசளிப்பிரச்சினை,மாயக்கள் பிரச்சினை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.நன்கு திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கின்றது.

    ReplyDelete
  2. It seems.. All work for ONE AGENDA..

    We trust in Allah and Let Us Make TAWBA and then DUA against to All Racist and Leaders who support and keep silent without acting.

    ReplyDelete
  3. ஏன் நமது முஸ்லீம் தலைமைகள் இன்னும் இரத்தம் தோய்ந்த காவிகளை இயக்கும், பாதுகாக்கும் தலைமைகளிடம் சென்று நீதி கேட்க வேண்டும்?? முதலில் அல்லாஹ்விடம் உதவியை நாடுங்கள்... பின்னர் உங்கள் அரசியல் சலுகைகளை தூக்கி வீசிவிட்டு (தமிழ் தலைமைகளைப் போல்) களத்தில் நின்று போராடுங்கள்!

    ReplyDelete
  4. செகுடன் காதில் ஊதும் சங்கைப்போலகிட்டு எங்களது கோரிக்கைகைகள். பொலிஸ் முதல் பாராளுமன்றம்,அமைச்சரவை,பிரதமர்.ஜனாதிபதிவரை போயாச்சி. இனி எங்குதான் போவது.எங்களது அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் தங்களது பதவிப்பட்டம், அந்தஸ்து, கௌரவம் பாராது ஒன்று சேர்த்து அரசுக்கு எச்சரிக்கை விடும்வரைக்கும் எதுவுமே நடக்காது. மைத்திரி ரணில் அதைத்தான் விரும்புகிறார்கள்போல். அதுவரைக்கும் எங்களது வேண்டுகோள், கோரிக்கைகள் குப்பையில்தான். எங்களது அமைச்சர்கள் யார் செய்வார்களென்பதுதான் இங்குள்ள கேள்வி? அமைச்சர் பதவி போனால் அவர்களின் உயிரும்பொய்த்திரும். ஏனனில் அமைச்சில்லாமல் ஒருநாளும் உயிர்வாழ்வது கஷ்டம்.

    ReplyDelete
  5. They are doing an effort. Rest is in the hands of Allah. Don't blame each other. When they were silent also people criticize. Now at least they have spoken. Now also criticizing them.

    ReplyDelete

Powered by Blogger.