Header Ads



இனவாதிகளின் கூடாரமாமாகும் நல்லாட்சி அரசாங்கம்..!

M.JAWFER.JP.

காலாகாலமாக இலங்கையின் இனவாதிகளின் அட்டாகாசம் நாட்டை குட்டிச்சுவராக மாற்றிவரும் செயற்பாடுகளின் ஒரு அங்கமாகவே தற்போதைய இனவாதக்கிளைகளும் அடங்கும். இனவாதிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலாகவின் பெயர் குறிப்பிடாத இனவாத திணைக்களமாக செயற்படுவது   அவ்வப்போது நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கங்கள்தான் என்பது எழுதப்படாத உண்மை.

அந்த அடிப்படையில் மஹிந்த ஆட்சியை அலங்கரித்த பௌத்த பேரினவாதிகளான பல செனாக்களின் புண்ணியத்தில் ஆட்சியை கடத்திய மஹிந்த அவர்கள்,தனக்கு சிறுபான்மை தமிழ், முஸ்லிம்   மக்களின் செல்வாக்கு தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருவதை அவதானித்த அவர் பேரினவாதிகளின் இனவாதக்கொள்கை மூலம் மட்டுமே மூன்றாவது முறையாகவும் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இனவாதிகளுக்கு தான் விரும்பும் அனைத்து பேச்சுரிமை,செயற்பாட்டு உரிமை அனைத்தையும் கொடுத்துவிட்டு தனக்கு எதுவுமே தெரியாத அப்பாவிபோல் வெற்றியின் சுவையை சுவைப்பதற்கு பகற்கனவு கண்டு கொண்டு இருந்தார்.அதன் விளைவை குறிப்பிட்ட எண்ணப்பட்ட நாட்களுக்குள் அனுபவித்தார் என்பது உலகறிந்த உண்மை.

அதே கொள்கையில் இன்னும்பல மெருகூட்டப்பட்ட வேலைத்திட்டங்களோடு இனவாதத்தை முன்னடுத்து வெற்றி கொள்வதன் மூலம் ஐந்தாண்டுத்திட்டத்தை விட பல தசாப்தங்களுக்கு சிறு பான்மையை பல வகையிலும் (இனச்சுத்திகரிப்பு,கல்வியில்  வீழ்ச்சி,பொருளாதாரத்தை முடக்குதல்,காணிகளை சுவிகரித்தல்)போன்ற தூர நோக்கு திட்டத்தோடு நாம் உருவாக்கிய நல்லாட்சி என்னும் தற்போதைய பொல்லாட்சி கங்கணம் கட்டிக்கொண்டு அதற்க்கான பொருப்புதாரிகளையும் நியமித்து செயற்பாட்டில் இறங்கி இருக்கிறது.ஆனாலும் இவ்வலவு தூரம் அவர்கள் சதிவலைகளை தீட்டி முன்னேரிச்சென்றுள்ள நிலையிலும் நாம் படிப்பினை பெறவில்லை என்பதுதான் கவலை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கு முன் நமது உரிமைகள் நியாயமாக பெறப்பட வேண்டும் என்று யோசித்த நேரம் இப்போதுள்ள பிரச்சினைகள் இருக்கவில்லை.ஆனால் அன்று சிலர் சுதாகரித்துக்கொண்டு செயற்பட்டதன் விளைவாக அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக மாறும் அளவுக்கு ஒற்றுமை மேலோங்கியது.எந்த சமூதாய தலைவராக இருந்தாலும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் என்ற இறைவனின் நியதிப்படி முஸ்லிம்களின் ஒற்று கூட்டலுக்கான இஸ்தாபகதலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களின் மரணத்தின் பின் அவரால் உருவாக்கப்பட்ட கட்சிக்காப்பாளர்கள் அனைவருக்கும் தலைமை பதவி தேவை என்றோ அல்லது தலைமை பதவியை தாங்கிக்கொண்டவர் ஏனையவர்களை வழி நடத்தும் வழிமுறையை இஸ்தாபக தலைவரிடம் இருந்து கற்றுக்கொள்ள மறந்துவிட்டாரோ அல்லது அஸ்ரப் எப்பொழுது மர்ஹும் அந்தஸ்த்தை அடைவார் தான் தான் தலைமை பதவியை பெற்றுக்கொள வேண்டும் என்று ஆவலோடு இருந்தார்களோ தெரியவில்லை பல கட்சிகளும் பல தலைவர்களும் முளைத்து  விட்டது.

ஒரேயொரு கட்சியாக இருந்த முஸ்லிம்களின் கட்சி பலவாறாக பிரிக்கப்பட்ட செய்தியை கேட்ட பேரினவாத இனவாதிகள் மட்டற்ற மகிச்சியடைந்து இருப்பார்கள். அதில் இருந்து அவர்களின் பல திட்டங்கள் தீட்டப்பட்ட விளைவுகள்தான் இன்றுவரை  மூன்று நான்காக பிரிந்த ஒரு கட்சியை ஓன்று சேர்க்க முடியாமல் பிரித்து வைத்து இருப்பது.தம்புள்ளை பள்ளி முதல் கிண்ணியா பள்ளிவரை கருவருக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது ஆனால் நாம் படிப்பினை பெறவும் இல்லை ஒன்றுபடவும் இல்லை.திருந்தவும் இல்லை.

இன்றைய இலங்கை முஸ்லிம்களை பொறுத்த வரை ரவுப்ஹகீம் ,ரிஷாத் பதுர்தீன்,அதாவுல்லாஹ்,ஹிஸ்புல்லாஹ் போன்றோர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து அல்குர் ஆனையும் அல் ஹதீசையும் பின்பற்றியவர்களாக ஓன்று பட்டால் பாத்திரமே எதிர்கால முஸ்லிம்களின் இருப்பு உறுதி செய்யப்படும்.இவர்கள் ஓன்று சேர்வதை எந்த இனவாதிகளும் விரும்ப மாட்டார்கள்.இவர்களின் ஒற்றுமையால் இன்று ஓன்று பட்டு இருக்கும் இனவாதிகள் பல பிரிவினையை சந்திப்பார்கள் என்பது மட்டும் உண்மை.அகவே இந்த நான்க்குபேரையும் ஒற்றுமைப்படுத்துவது யார்?

No comments

Powered by Blogger.