முஸ்லிம்களுக்கு எதிராக 6 முறைப்பாடுகள்
நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை குறித்து நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
முகநூல் பதிவுகளில் வெளியிடப்பட்டு வரும் இன, மத பேதங்களை தோற்றுவிக்கும் செயற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த சில வாரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக 6 முறைப்பாடுகள் பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தந்துரையில் முஸ்லிம் இளைஞன் புத்தருக்கு எதிராக வெளியிட்ட முகநூல் பதிவு தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
கண்டி, அஸ்கிரிய, மல்வத்த பீடங்களிலிருந்து கலந்துகொண்ட குருமார்கள், பொலிஸார் தோரயாயவில் ஞானசார தேரரை கைது செய்ய முயற்சித்தமை தொடர்பில் தங்களது கண்டனங்களை வெளியிட்டனர். அது தவறு என்றும் சுட்டிக்காட்டினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வமத தலைவர்களின் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தி பிரச்சினைகளை உடனுக்குடன் இனங்கண்டு தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார். சட்டமும் ஒழுங்கும் பாகுபாடின்றி அமுல் நடத்தப்படும் என்றும் கூறினார்.
ஞான சாராருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதவரை இந்த நாட்டில் சமாதானம் என்பது வெறும் குதிரை கொம்புதான்.
ReplyDeleteஞானசார ஒரு ரிமோட் பொம்மை மட்டுமே. அவன் இல்லாவிட்டாலும் அவனை போல் 100 ஞானசாரர்களை ரிமோட் வைத்திருப்பவர்களால் இயக்க முடியும்.
Deleteஞானசாரரை வெளியில் கொண்டுவருவதற்கான கூட்டம் போல் தெரிகிறது.
ReplyDeleteRacist Elephant is left free.. but mouse are punished for their reactions.
ReplyDeleteRule of Law OR Ruling the Law in MY3 government.
We Lankan needs Peaceful situation for all its citizens and Unbiased Law implementation to all racists regardless of their status or race.