வவுனியாவில் 5 பேருக்கு, இன்று மரணதண்டனை
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு இன்று (01.06) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றவாளிகள் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டமையால் மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், குற்றவாளிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த இளைஞருக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சுந்தரபுரத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி 24 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆராச்சிலாகே தர்மகீர்த்தி என்ற குடும்பத்தலைவர் படுக்கை அறையில் வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்துடன், தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தில் அவரது மனைவியான ரோகினி தமயந்தினி என்பரைக்கைது செய்த பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகள் கடந்த 2014.01.25 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
இதையடுத்து இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டள்ளதால் அவரது மனைவியான ரோகினி தமயந்தி என்பவரே கணவனை கொலை செய்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே எதிரிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு வவுனியா சாஸ்திரிகூளாங்குளம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்து தங்க நகைகள் மோதிரம் என்பனவற்றை கொள்ளையடித்ததுடன், அங்கு இருந்த சிவகுமார் இந்துமதி என்ற பெண்மணியை கொலை செய்த குற்றத்திற்காக இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2016. 06.02. வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது. இன்று வவுனியாமேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறித்த குற்றச்சாட்டிற்கு எதிரியான வி. கனகமனோகரன் என்பவருக்கு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்த குற்றத்திற்கு 10வருட சிறைத்தண்டனையும் சி. இந்துமதி என்பவரை படுகொலை செய்த குற்றத்திற்கு சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டள்ளதால் எதிரிக்கு மரண தண்டனை வழங்கித்தீர்ப்பளித்தார்.
Post a Comment