Header Ads



இன முறு­கலை ஏற்­ப­டுத்த முயன்ற 3 பேர் கைது - கம்­பளை பகு­தியில் சம்­பவம்

கம்­பளை எல்­பிட்­டிய  பிர­தே­சத்தில்  இனங்­க­ளுக்­கி­டையே முறுகல் நிலையை தோற்­று­விற்கும் வித­மாக நடந்து கொண்­டார்கள்  என்ற சந்­தே­கத்தின் பேரில் நண்­பர்­க­ளான மூன்று இளை­ஞர்­களை கம்­பளை பொலிஸார்  கைது செய்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட மூவ­ரையும் கம்­பளை மாவட்ட நீதிமன்ற  நீதிவான் சாந்­தினி மீகொட முன்­னி­லையில்  ஆஜர் படுத்­தி­ய­தை­ய­டுத்தே  குறித்த மூவ­ரையும் 29 ஆம் திகதிவரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

நேற்­று­முன்­தினம் நண்­பர்­க­ளான பெரும்பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த இரு­வரும் மற்­று­மொரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு­வரும் எல்­பிட்­டிய முஸ்லிம் கிரா­மத்­திற்கு அருகில் ஒதுக்­குப்­பு­ற­மான ஒரு இடத்தில் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் வைத்து மது அருந்­தி­ய­தாக தெரிய வரு­கி­றது. இச்­சந்­தர்ப்­பத்தில் அவ்­வ­ழி­யாக சென்ற முஸ்லிம் இளைஞர் ஒருவர் இவ்­வி­டத்தில் வைத்து மது அருந்த வேண்­டா­மென கூறி­ய­தை­ய­டுத்து அங்கு இடம் பெற்ற வாய்த்­தர்க்கம் கைக­லப்­பாக மாறி­யதில் ஒருவர் காய­ம­டைந்த நிலையில் கம்­பளை வைத்­திய சாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார் 

இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து அப்­பி­ர­தே­சத்தில் பதற்றமான சூழல்  நில­வி­யது, இத­னை­ய­டுத்து அங்கு பொலிஸார் விரைந்து அமை­தியை ஏற்­ப­டுத்­தினர். இதன்­போதே குறித்த மூவரும் கைது செய்­யப்­பட்டு கம்­பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியதையடுத்தே குறித்த மூவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

விடிவெள்ளி

No comments

Powered by Blogger.