Header Ads



சூதாட்ட கடனாளி, 36 பேரை சுட்டுக்கொன்றான்


பிலிப்பைன்ஸ் நாட்டில் சூதாட்ட மையத்தில் 36 பேரை கொன்றுவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவில் உள்ள Resorts World Casino என்ற சூதாட்ட மையம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த மையத்தில் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி ஹொட்டலுக்கு தீ வைத்ததில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் தாக்குதல் நடத்திய நபரும் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் Jessie Javier Carlos எனத் தெரிய வந்தது.

மேலும், இவர் பிலிப்பைன்ஸ் குடிமகன் எனவும் தீவிரவாதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

சூதாட்டத்திற்கு அடிமை ஆனதால் கணக்கில்லா பணத்தை இழந்து கடனாளி ஆகியுள்ளார். கடன் தொல்லை தாங்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளார்.

இதுபோன்ற ஒரு மனநிலையில் தான் அவர் சூதாட்ட மையத்தில் தாக்குதல் நடத்தியதாக விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

8 comments:

  1. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
    (அல்குர்ஆன் : 5:91)

    ReplyDelete
  2. So ivanum oru theeeviravaathithaaan....
    How can say he is not a terrorist...?

    ReplyDelete
    Replies
    1. அக்கொலையாளிக்கு முஸ்லிம் பெயர் இல்லாததனால் அவன் தீவிரவாதியல்ல; அது அவர்களது அகராதி.

      ஆனால், ஓர் உண்மையான முஸ்லிம், இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையான அம்சங்களைக் கற்று அதனை நீதமான முறையில் தீவிரமாக தனது வாழ்வில் அமுல் நடத்தும்போது ஓர் அடிப்படைவாதியாகவும் தீவிரவாதியாகவுமே இருப்பான்.

      இஸ்லாமிய அகராதியில் இதற்கான விளக்கம் இதுவாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

      Delete
  3. இது போன்ற சமூக கொடுமைகள் ஏட்படக்கூடாது என்ற காரணத்தாலேயே இஸ்லாம் சூதாட்டத்தை தடை செய்துள்ளது .நமது நாட்டிலும் இதுபோன்ற சூதாட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும் .

    ReplyDelete
  4. உங்களுக்கு தெரியாதா தம்பி? உலகம் தீவிரவாத பட்டம் கொடுக்க முதல் தகமை முஸ்லிம் பெயர் வைத்திருக்க வேண்டும் , இவண்ட பெயர்தான் முஸ்லிம் பெயர் இல்லையே......

    ReplyDelete
  5. மதுபானம் சூதாட்டம் பகைமையையும் வெறுப்பையும் கொண்டுவருமானால், இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதமும் அதைத்தானே செய்கிறது.

    ReplyDelete

  6. எந்த மார்க்கத்திலும் அடிப்படையான விடயங்கள் இருக்கும். அவற்றைக் கற்று தீவிரமாக அவற்றை செயல்படுத்துவது பிழையானதா?

    ஒரு மார்க்கத்தைச் சரியாகக் கற்ற அடிப்படைவாதிகளும் கற்றதை தீவிரமாகச் செய்யும் தீவிரவாதிகளும் தவறானவர்களா?

    இது எல்லா மார்க்கங்களுக்கும் பொதுவாகப் பொருந்தக் கூடியதே.

    இஸ்லாத்தைப் பொறுத்தவரை பகைமையையும் வெறுப்பையும் அது எங்குமே போதிக்கவில்லை.

    உலகின் அதி இளவயது மார்க்கமான இஸ்லாத்தின் அதீத வளர்ச்சியைப் பொறுக்காமல் அதன் பெயருக்குக் களங்கம் விளைவித்து அதனைத் தடுக்கும் நோக்கோடு செயல்படும் இஸ்லாத்தின் விரோதிகளின் கூலிப்படைகள் பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

    அவை இஸ்லாமுமல்ல; அவர்கள் முஸ்லிம்களுமல்ல.

    இஸ்லாத்தில் எங்கும் குறை இருக்குமானால் அதன் அடிப்படை வேதமான புனித குர்ஆனில் அதனைப் கண்டுபிடித்துக் கேளுங்கள்.
    அது உங்களுக்காகவும் இறக்கப்பட்டதுதான்.
    www.tamililquran.com







    இஸ்லாமிய அடிப்படைத்

    ReplyDelete

Powered by Blogger.