இலங்கையில் 2 முஸ்லிம் பகுதிகளில் ஜப்பானின் அதிநவீன ராடர்
மோசமான வானிலை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்காவில் இரண்டு டொப்ளர் ராடர்களை ஜப்பான் பொருத்தவுள்ளது.
ஜப்பான் அன்பளிப்பாக வழங்கவுள்ள இந்த இரண்டு ராடர்களும், சிறிலங்காவின் கிழக்குப் பக்கத்தில் பொத்துவிலிலும், மேற்குப் புறமாக கற்பிட்டியிலும் பொருத்தப்படும் என்று சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலர் மீயான்வல தெரிவித்தார்.
இந்த ராடர்களைப் பராமரிப்பது உள்ளிட்ட நிபுணத்துவ சேவைகளையும் ஜப்பான் வழங்கவுள்ளது.
இதுதொடர்பான உடன்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையில் அடுத்த சில நாட்களில் கைழுத்திடப்படும்.
ஏற்கனவே அமெரிக்காவினால் வழங்கப்பட்ட டொப்ளர் ராடர் தொகுதி பழுதடைந்து விட்டதாகவும், பழுதுபார்ப்பதற்காக அது அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த டொப்ளர் ராடர் முன்னர் சிறிலங்காவின் மிகஉயர்ந்த மலையான பீதுருதாலகாலவின் உச்சியில் நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment