மாட்டின் பெயரால் மீண்டும் ஒரு முஸ்லிம் படுகொலை, வீட்டிற்கு தீ - இதுவரை 29 பேர் உயிரிழப்பு
ஜார்கண்ட் மாநிலத்தில் பரியாபாத் என்ற ஊரை சேர்ந்தவர் உஸ்மான் அன்சாரி, இவர் பால் வியாபாரியாக இருந்து வருகிறார்.
அவரிடம் இருந்த பால் வியாபாரத்திற்காக வைத்திருந்த பசு மாடு ஒன்று நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து விட்டது.
இறந்த மாட்டை புதைக்க சொல்லி அருகிலுள்ள தலித் இளைஞர்களிடம் பணமும் கொடுத்து சென்று விட்டார்.
தலித் இளைஞர்கள் மாட்டை புதைக்காமல் இறைச்சிக்காக தலையை தனியாக வெட்டி ஓரமாக போட்டுவிட்டு இறைச்சியை கொண்டு சென்று விட்டனர்.
உஸ்மான் அன்சாரி பசு மாட்டை கொன்றுவிட்டார் என்று பாஜக, RSS இந்துத்துவ தீவிரவாதிகள் திரண்டு வந்து உஸ்மான் அன்சாரி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அவரது வீட்டிற்கும் தீ வைத்தனர்.
தகவலறிந்த காவல்துறையினர் உஸ்மான் அன்சாரி வீட்டிற்கு வந்த போது அவர்கள் மீதும் பாஜக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 30 போலீஸார் படுகாயம் அடைந்துள்ளனர்.
தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் போலீஸார் அவர்களை கலைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாட்டின் பெயரை சொல்லி இதுவரை 28 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உஸ்மான் அன்சாரியை சேர்த்து 29 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேர் முஸ்லிம்கள் ஆவர். 4 பேர் தலித்துக்கள் ஆவர்.
Post a Comment