Header Ads



இலங்கை, சிறுவர்கள் வளர்வதற்கு தெற்காசியாவில் 2ஆவது சிறந்த நாடு

சிறுவர்கள் வளர்வதற்கு தெற்காசிய பிராந்தியத்தில் இரண்டாவது சிறந்த நாடாக இலங்கை தரவரிசை படுத்தப்பட்டுள்ளது.

அயல்நாடுகளான இந்தியா, பங்களாதேநு; மற்றும் மியன்மார் போன்வற்றை பின்தள்ளி சிறுவர்கள் வளர்வதற்கு உலகில் 61 ஆவது சிறந்த நாடாக இலங்கை தரவரிசை படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர்களின் உரிமைகளை ஊக்குவிக்கும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்பான சேவ் தி சில்ட்ரனின் (Save the Children) புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், சந்தோசமானதும் நிறைவானதுமான சிறுவர் பராயமொன்றை பூர்த்திசெய்வதற்கான உரிமைகள் இலங்கையிலுள்ள மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு இன்னும் மறுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. 

ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கை பெற்றோர் தமது பிள்ளைகளை விட்டுவிட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஏனைய நாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்வது இதற்கொரு காரணமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

“இலங்கைக்கு சாதகமானதாக இருப்பதாகவே நாம் இந்த பெறுபேறை பார்க்கிறோம். மாலைத்தீவுகளைத் தவிர தெற்காசியாவிலுள்ள ஏனைய அனைத்து நாடுகளையும் பார்க்க இது சிறப்பாக இருக்கிறது. எவ்வாறிருப்பினும், முன்னேற்றத்துக்கான வழியும் இருக்கிறது” என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் இலங்கை பணிப்பாளரான கிறிஸ் மெக்கைவர் தெரிவித்துள்ளார். 


1 comment:

Powered by Blogger.