Header Ads



மியான்மரில் 116 பேருடன் சென்ற, இராணுவ விமானத்தை காணவில்லை

மியான்மரில் 116 பேருடன் சென்ற இராணுவ விமானம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரின் இராணுவ தளபதி இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார்.

116 பேருடன் சென்ற மியான்மர் இராணுவ விமானம் மாயமானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மியான்மரின் மையிக் மற்றும் யாங்கூன் இடையே இந்த விமானம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் மேக் மற்றும் யாங்கோனுக்கு இடையே சென்ற போது விமானம் ராடார் சிக்னலில் இருந்து மறைந்தது.

தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விமானிகளை தொடர்பு கொள்ள முடியாததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 1.35 மணிக்கு தாவே நகருக்கு மேற்கே 20 மைல்கள் தொலைவில் சென்றபோது விமானத்தின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாகவும், விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இராணுவ தலைமை தளபதி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமல் போன விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்ததாக விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. அள்ளாஹ் போதுமானவன்.

    ReplyDelete

Powered by Blogger.