103 வயது முதியவர் 'இப்தாரில்' கலந்துகொண்டு சாதனை!
-எம்.ஜே.எம். தாஜுதீன்-
நீர்கொழும்பு கம்மல்துறை அல்-பலாஹ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் கடந்த 03.06 2017 சனிக்கிழமை இரவு நடைபெற்ற 'இப்தார்' நிகழ்வில் அதே ஊரைச் சேர்ந்த 103 வயது முதியவர் ஒருவர் கலந்துகொண்டு சாதனை புரிந்தார்.
நூற்றாண்டை அண்மிக்கும் அல்-பலாஹ்" என்ற தலைப்பிலான கருத்தரங்கை முன்னிட்டு பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் சதீஷ்கானின் முயற்சியில் "ஜம்இய்யதுன் நிதா" அமைப்பினால் இந்த இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.
பலகத்துறை தக்கியா வீதி ரீட்டா மாவத்தையில் வசிக்கும் முகம்மது நயீம் என்ற 103 வயது முதியவரே இந்த இப்தாரில் கலந்துகொண்டராவார்.
இவர் முன்னாள் சிறந்த கட்டடக் கலைஞர் என்பதும் தற்போது இவ்வூரில் உள்ள மூத்த பிரஜையுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment