கட்டுநாயக்க விமான நிலையத்தில், 1000 கட்டார் ரியால்களையே பணப்பரிமாற்றம் செய்யலாம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள வணிக வங்கிகளில் கட்டார் ரியால் பரிமாற்றம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விமான நிலையத்திலுள்ள அரச வங்கி கிளையில் நாம் வினவினோம்.
ஆயிரம் ரியாலுக்கு உட்பட்டு பணப்பரிமாற்றம் இடம்பெறுவதாக அதன் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதேவேளை, கட்டார் ரியாலை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என வங்கி, வணிக வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை இலங்கை மத்திய வங்கி நிராகரித்துள்ளது.
இந்த விடயத்தை தெளிவுபடுத்தும் வகையில் மத்திய வங்கி அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், கட்டாரிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் சிலர் கட்டார் ரியால்களை இலங்கை ரூபாவாக பரிமாற்றம் செய்ய முடியாமல் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அசௌகரியத்தை எதிர்நோக்கினர்.
Post a Comment