Header Ads



குழந்தையை கடித்த, நாய்க்கு மரண தண்டனை

குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விசித்திரமான தீர்ப்பொன்றை பாகிஸ்தானிய நீதிமன்றமொன்று வழங்கியுள்ளது. 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பாக்கர் நகரில் குழந்தையை கடித்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

மேலும் நாயிடம் கடிபட்ட குழந்தையின் பெற்றோர், பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் மரண தண்டனை உத்தரவை பிறப்பித்ததாக  பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நாய் செய்த குற்றத்திற்காக நாயின் உரிமையாளர் ஒருவார காலம் சிறைவாசம் அனுபவித்த நிலையில், நாயிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

2 comments:

  1. குழந்தையை கடித்த நாயின் உரிமையாளருக்கு ஒரு வாரகால சிறைத் தண்டனை நியாயமானது.

    நாய் பகிரங்கமாக வெளியே திரிய அனுமதித்த குறித்த நகர நிர்வாகத்தினர் அதை விடவும் தண்டிக்கப்படத் தகுதியானவர்கள்.

    ஆனால், ஐயறிவு கொண்ட நாய் தன் பக்க நியாயங்களை எடுத்துக்கூற முடியாது உள்ள நிலையில் அதற்கு மரண தண்டனை வழங்குவது அநீதியாகும்.

    கட்டாக்காலி நாய்களும், ஆடு மாடுகள் போன்ற கால்நடைகளும் பொது மக்களுக்கு இடைஞ்சலாக பொது வாழ்வில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும்.

    அதே நேரம், அவைபோன்று நடக்கும் இரு கால்கள் கொண்ட விலங்குகளையும் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

    அப்போதுதான் எந்நாட்டிலும் அமைதி நிலவும்.


    ReplyDelete
  2. இந்த மாதிரி முட்டாள்கள் இருக்கும்வரை பாக்கிஸ்தான் உருப்படாது! அது ஒரு 5 அறிவுள்ள மிருகம் அதை வளர்ப்பவர் வீட்டில் கட்டிப்போட்டு வளர்க்கவேண்ண்டும் .இதில் குற்றவாளி நாயின் உரிமையாளர்தான் அவருக்கு தண்டனை கொடுக்கலாம் அதை விட்டுவிட்டு நாயைக்கொள்வது என்பது மிகப்பெரிய அநியாயம் .அந்த நாயை நாய்கள் சரணாலயத்திட்கு அனுப்பிவைப்பதே சரி .

    ReplyDelete

Powered by Blogger.