''முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க, பொலிஸார் தவறிவிட்டனர்''
முஸ்லிம்களின் வணிக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா காவல்துறை தவறி விட்டதாக, மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிலையங்கள், பள்ளிவாசல்கள், மையவாடி (இடுகாடு) என்பனவற்றின் மீது கடந்த ஒரு மாத காலத்துக்குள் இடம்பெற்றுள்ள 20 வரையான தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் சிறிலங்கா காவல்துறையினரால் எவரும் கைது செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக கொழும்பில் நேற்று கருத்து வெளியிட்ட மனித உரிமை செயற்பாட்டாளராக விக்டர் ஐவன்,
“காவல்துறையினரின் செயலற்ற தன்மையால் தான், 2014ஆம் ஆண்டு 4 பேரைப் பலிகொண்டது போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மீள நிகழ்த்தப்பட்டுள்ளன.
குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததன் மூலம், இந்த நடவடிக்கைகள் தொடர்வதற்கு சிறிலங்கா காவல்துறையே பொறுப்பாளியாகியுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறைகளுக்கு பௌத்த அடிப்படைவாத அமைப்பு ஒன்றே காரணம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment