புலி பயங்கரவாதிகளினால் ஷஹீதாக்கப்பட்டு, அரசினால் கைவிடப்பட்டவர்களுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் உதவி
1990 ம் ஆண்டு காலகட்டத்தில் புலி பயங்கரவாதிகளின் தாக்குதலின் காரணமாக 100 பேர் ஷஹீதாக்கப்பட்டு வீடுகள் சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்டு அரசாங்கத்தினாலும் கைவிடப்பட்டு எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி களிமண் வீடுகளில் வாழ்ந்து வந்த பொலன்னறுவை அக்பர் புறம், பள்ளித்திடல் கிராம மக்களுக்கென ஶ்ரீலங்கா ஹிரா பெளண்டேசன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 50 வீடுகளை கொண்ட புதிய வீடமைப்பு தொகுதியினை கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (17) இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக ஶ்ரீலங்கா ஹிரா பெளண்டேசன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான கௌரவ எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு வீட்டுதொகுதியினை பயானாளிகளுக்கு கையளித்தார்.
இந் நிகழ்வில் ஶ்ரீலங்கா ஹிரா பெளண்டேசன் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம் மும்தாஸ் (மதனி) பொலன்னறுவை மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரகட்சி அமைப்பாளர் பஸீர், காத்தான்குடி முன்னாள் நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர், காத்தான்குடி முன்னாள் நகர சபை உறுப்பினர் ரஊப் ஏ மஜீட் உட்பட சமூகப் பிரமுகர்கள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வாழ்த்துக்கள் அமைச்சரே... சத்தமில்லாமல் சாதித்துக்கொண்டே செல்கிறீர். இறைவன் இந்த ஏழைகளின் துஆக்கள் ஊடாக உங்களுக்கு அருள் செய்வானாக.
ReplyDelete