ரவி மீது, மஹிந்தவுக்கு திடீர் பாசம்
நிதியமைச்சராக செயற்பட்ட ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து ரவி கருணாநாயக்கவுக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், மஹிந்த ராஜபக்ச கடுமையாக விமர்சித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தில் பிரதான பாத்திரத்தில் இருக்கும் ரவி கருணாநாயக்கவை, வெளிவிவகார அமைச்சராக நியமித்தது பொருத்தமில்லை எனவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியினர், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment