புல்மோட்டையில் பதற்றம், இம்ரான் எம்.பி தலையீடு
புல்மோட்டை பட்டிகுடா கரையாவெள்ளி மீள் குடியேற்றப் பகுதியில் இன்று -19- பிற்பகல் வேளையில் வனப்பரிபாளன அதிகாரிகள் குச்சவெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்தமையால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
இன்று பிற்பகல் வேளையில் இப்பகுதிக்கு விஜயம் செய்த மேற்கூறிய குழுவினர் அங்கு மீள்குடியமர்ந்துள்ள மக்களை அச்சுறுத்தியதாகவும் அவர்களின் காணிகளில் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது, இது வன பரிபாலன சபைக்கு சொந்தமானது என தெரிவித்தமையால் அப்பகுதி மக்கள் இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடன் உரையாடி வன பரிபாலன சபை அதிகாரிகளை அங்கிருந்து செல்ல உத்தரவிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ,
இது நீண்ட காலமாக மீள் குடியமர்ந்த பொதுமக்கள் வாழும் பிரதேசமாகும். இக் காணிகளுக்கான பேர்மிட் களும் அவர்களிடம் உள்ளன. இது அரசாங்கத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்த சில அரச அதிகாரிகள் செய்யும் திட்டமிட்ட செயற்பாடாகும். இது தொடர்பாக அரசாங்க அதிபருக்கு தெளிவூட்டி இனி இப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வண்ணம் எந்தவித செயற்பாடுகளையும் மேற்கொள்ள கூடாது என வன பரிபாலன சபை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் இவ்விதமான திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் சம்மந்தமாக ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டுவரவுள்ளேன் என தெரிவித்தார்.
இந்த வனபரிபாலனசபை எல்லாம் எந்த அரசுக்கு கீழ் இயங்குகிறது இந்தியன் அரசிற்கு கீழா அல்லது இலங்கை அரசிற்கு கீழ.இந்த அரசு வெட்கப்பட வோண்டும்.ஒவ்வொரு அதிகாரியும் வருவதும் சாதரன மக்களை பயமுறுத்தாட்டுவதும். பின் அரசியல் வாதிகள் வந்து ஆடு மாடுகளை கலழப்பது போல் அவர்களை கழைப்பதும்.இது ஒரு தொடர்கதையாகிவிட்டது.சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு என்ன தண்டனை.
ReplyDeleteதுள்ளியமான வனபரிபாலன நில அளவை வரைபடங்களை அஅதிகாரிகள் வைத்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகளை தவிர்களாமே.
ReplyDeleteஉரிய காணி பத்திரங்கள் இல்லாமல் அரச/தனியார காணிகள் ஆக்கிரமிக்கபட்டிருந்தால் குற்றவாளிகளுக்கு
எதிராக உடனடியாக வழக்குபதியவும் வேண்டும்.
அதே போல், உரிய காணி பத்திரங்கள் வைத்திருப்போருக்கு தொல்லை கொடுக்கும் அதிகாரிகளும் தண்டிக்கபடவேண்டும்.