முஸ்லிம்களைப் பிரித்தெடுக்க சூழ்ச்சி, அரசாங்கம் மௌனமாக இருக்காது - ஹலீம்
மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் தாக்குதல்கள் முஸ்லிம்களை அரசாங்கத்தின் மீது வெறுப்படையச் செய்வதற்கான சூழ்ச்சியாகும். பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களையும் , முஸ்லிம்களின் காணிகள் மீது அத்துமீறி மேற்கொள்ளப்படும் அடாவடித்தனங்களையும் அரசாங்கம் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்காது என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
கொஹிலவத்தை மற்றும் பாணந்துறையில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை, செல்வநகரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க முயல்கின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் ஹலீம் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் அரசியல் சூழ்ச்சியாகவே நம்பப்படுகிறது. இவை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் முஸ்லிம்களைப் பிரித்தெடுப்பதற்கான சூழ்ச்சியாகும். இந்தச் சூழ்ச்சியை முறியடிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளன.
முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்படுவதற்குத் தீர்மானித்திருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாக முஸ்லிம்களைப் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மீண்டும் ஓர் இனக்கலவரத்தை உருவாக்கும் முயற்சியிலே சமூக வலைத்தளங்கள் ஈடுபட்டுள்ளன. இதனை எதிர்க்கட்சியினர் நிராகரிப்பதாகத் தெரியவில்லை. இதனை அவர்கள் ஆதரிக்கின்றனர்.
முஸ்லிம்களை அரசாங்கத்திலிருந்தும் பிரித்தெடுத்து புதிய அரசியல் கலாசாரமொன்றினை உருவாக்குவதற்கான சூழ்ச்சியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை முறியடிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்.
பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களின் சூத்திரதாரிகள், பள்ளிவாசல்களில் சி.சி.ரி.வி.கமெரா பொருத்தப்படாதிருப்பதால் இனம் காணப்படாதிருக்கிறார்கள்.
எனவே அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் பள்ளிவாசல்களை இனங்கண்டு அவற்றுக்கு சி.சி.ரி.வி. கமெரா பொருத்துவது பற்றி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆலோசித்து வருகிறது.
ARA.Fareel
ARA.Fareel
Shame, Shame, Yahapalanya is counting the days.......
ReplyDeleteAfter the end of the countdown to whom are you going to vote?
ReplyDelete