ஜனாதிபதிக்கு ஒன்றும் தெரியாதாம், ஞானசாரரை கைதுசெய்ய உத்தரவில்லை..!
குருணாகல் - தம்புள்ளை வீதியில் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நேற்று குழப்பம் ஏற்படுத்தியிருந்தனர்.
இதன்போது தலையிட்ட பொலிஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் பிடியாணையின்றி தன்னை பொலிஸார் கைது செய்ய முயற்சித்ததாக ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்
இது தொடர்பில் ஞானசார தேரர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளார்.
எனினும், ஞானசார தேரரை கைது செய்ய தான் உத்தரவிடவில்லை என்றும், இந்த விடயம் குறித்து தனக்கு தெரியாது எனவும் அமைச்சர் மறுத்துள்ளார்.
நேற்றைய சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி செயலகமும் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதிக்கும் இது தொடர்பில் ஒன்றும் தெரியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள ஜனாதிபதிக்கு நாட்டு நடப்புக்கள் ஒன்றும் தெரியாது பட்ச குழந்தை அப்படிப்பட்ட மனிதரை ஜனாதிபதியாக தெரிவு செய்தவர்களுக்கு முதலில் செருப்பால அடிக்க வேண்டும் பிறகு அவருக்கு வாக்கு வழங்கியவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
ReplyDeleteநாட்டில் உள்ள மந்திரிமார்களும் ஒரே போதையில் இருக்கிறார்கள் அவர்களுக்கும் ஒன்றுமே தெரியாது.
ஜனாதிபதிக்கு ஞானசாரரைக் கைது செய்யச் செய்ததாக கூறப்பட்டவை தெரியாதாம்.
ReplyDeleteஅப்படி என்றால் பொலிஸார் செய்யும் கடமைகள் எல்லாம் ஜனாதிபதிக்கு தெரிய வைத்துத் தான் செய்ய வேண்டுமோ!
அன்றி அதாவது ஞானசார அனுமதியின்றி செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தனரோ?
ஆயன், ஞானசார செய்யும் முஸ்லிம்களுக்கும். இஸ்லாத்துக்கும், மசூதிகளுக்கும் எதிராகச் செய்து வரும் அக்கிரமங்கள், ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல்கள், அழிவுகள், அமைதியின்மை, சட்டமும் ஒழுங்கும் மிதிக்க வைத்தமை யாவும் ஹறாதிபதியின் அனுசரனையுடன் செய்யப்பட்டதா?
அப்படியானால் சட்டத்தின் முன்னஆல் அனைவரும் சமம் என்ற அரசியல் யாப்பு ஜனாதிபதியால் மீறப்பட்டதா?
சட்டத்தால் அனைவரும் பாதுகாக்கப்படுவர் என்ற அரசியல் யாப்பு அதனைக் காக்க வேண்டிய நாட்டின் அதிபரின் அனுமதியுடன்தான் மீறப்பட்டதா!
தனிமனிதன் பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல், அழிவு ஏற்படுத்தியதுடன், சட்டத்துறைக்கு சவாலும் அச்சுறுத்தலும் விட்டதன் பொறுப்பு யார் சார்ந்தது!