Header Ads



ஞானசாரரின் அத்துமீறலுக்கு விஜயதாச ஆதரவு - ஜனாதிபதியும், பிரதமரும் மௌனம்


- Abdul Majeed - ஜனாதிபதியும், பிரதமரும் மௌனம்-

இன்றைய நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு இலங்கை முஸ்லிம்கள் நூறு வீதமான பங்களிப்பை செய்துள்ளனர். கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முஸ்லிம்களின் அரசியல், போருளாதார, ஆன்மீக உரிமைகளுக்கு பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அந்நிலையில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதன் நோக்கமாக இன்றைய நல்லாட்சி அரசை உருவாக்குவதில் முஸ்லிம் மக்கள் அளப்பரிய பங்காற்றியிருந்தனர். இன்றைய அரசிலும் அதே நிலைமை தொடர்ந்து கொண்டு வருவதனை முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் அனுமதிக்கப்போவதில்லை. சட்டத்தினை நிலைநாட்டுவதில் நல்லாட்சி அரசு பாரபட்சம் காட்டுவதாக தெரிகிறது. சிங்கள பௌத்த இனவாத அமைப்புக்கள் சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டு காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபட்டு வருவதனை அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றது. நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் நடவடிக்கைகள் ஞானசாரா தேரரின் அத்துமீறிய செயல்களுக்கு ஆதரவு வழங்குவது போல் அமைகின்றன.

சிறுபான்மை மக்களின் அரசியல், பொருளாதார, கலாசார மற்றும் ஆன்மீக விடயங்களுக்கு பொதுபல சேனா, ராவண பழைய, சிங்கள ராவய போன்ற அமைப்புக்களால் விடுக்கப்பட்டு வரும் அசச்சுறுத்தலை ஜனாதிபதியும் பிரதமரும் இனியும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.சட்டம் அதன் கடமையை செய்வதில் சிறுபான்மை மக்களுக்கு தாமதம் செய்வது ஏன்? ஞானசார தேரரின் அடாவடித்தனங்களை பொலிஸார் கண்டும் காணாமல் இருப்பதுடன் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதிலும் அலட்சியம் செய்வதாக அறிய முடிகிறது. சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க இது விடயத்தில் துரித நடவக்கை எடுத்து நாட்டில் குழப்பங்களை விளைவிக்க முற்படும் ஞானசார தேரர் போன்றோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். முஸ்லிம்களின் பள்ளிவாசல்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்வதும் எங்களின் பாரம்பரிய நிலங்களின் மீது மேலாதிக்கம் செய்து அபகரிக்க முற்படுவதும் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வுரிமைக்கு விடும் பாரிய சவாலாகும்.

இத்தகைய போக்குகள் தொடர்ந்தும் நீடிப்பது நல்லாட்சி அரசு என்ற சொல்லுக்கு உகந்ததல்ல. சிறுபான்மை மக்களின் ஆதரவோடு நாட்டின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் நடவடிக்கைகள் திருப்தி தருவதாக அமையவில்லையென மக்கள் ஆதங்கப்படுகின்றனர். மஹிந்த ராஜபக்ச அரசிற்கும் நல்லாட்சி அரசிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்று கேள்வியெழுப்புகின்றனர்.

ஐ.நாவினால் பிரகடஞ்செய்யப்பட்ட சர்வேதேச வெசாக் தினத்தை அரசு அண்மையில் கொண்டாடியது. கௌத்தம புத்தர் போதித்த தத்துவங்களை சில பௌத்த தேரர்கள் மறந்து செயற்படுகின்றனர். அன்பு, கருணை, இரக்கம் போன்ற நல்ல போதனைகளை புத்தர் போதித்தார். அவரது போதனையை ஏற்றுக்கொண்டு வழிபடுகின்றவர்கள் அதற்கு மாறாகவே செயற்பட்டு வருகின்றனர். அவரது தத்துவங்களை சிரமேற்கொண்டு இன்றைய நல்லாட்சி அரசாங்கம் செயற்படுமானால் நாட்டில் வாழும் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் சகோதரத்துவம், நல்லிணக்கம் சம உரிமை போன்றன சிறந்து விளங்க வழி வகுக்கும். சிங்கள இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளை அரசு தொடர்ந்தும் அனுமதிக்குமானால் ராஜபக்ச அரசுக்கு சந்தித்த வீழ்ச்சியை இன்றைய அரசும் சந்திக்க வேண்டிய நிலை விரைவில் ஏற்படும்.

2 comments:

  1. பொலிஸார் சட்டத்தை நடைமுறை படுத்தமாட்டார்கள் மேலிடத்திலிருந்து உத்தரவு வரும் வரைக்கும். ஆகவே அமைச்சர்கள்,முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகிறீர்கள்? இப்படியே ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அறிக்கைவிடுவதில் என்னபலன். இதை எங்களது ஜனாதிபதியோ/பிரதமரோ கண்டுகொள்ளமாட்டார்கள். இப்போ என்ன செய்யப்போகிறீர்கள்? இதில் எங்களது General secretory of UNP. Mr கபீர் ஹாஷீம் அவர்கள் எங்கேபோய்ட்டார்? Faizel Musthafa எங்கே, ஹலீம் அவர்கள் எங்கே, கௌரவ தலைவர் ஹீக்கீம் எங்கே, ஏன் நீங்களெல்லாம் முஸ்லிம்களில்லையா? இன்னும் உங்களுக்கு உலகின் பேராசையைகளை அனுபவித்துமுடியலயா? ஏன் உங்களுக்கு மரணமில்லையா? ஏன் எதற்கு இன்னும் இந்த மௌன விரதம்.ஆட்சி அதிகாரமிருந்தும் சமூகத்துக்குக்காக என்ன செய்தீர்கள். சரி இனி என்ன செய்யப்போகிறீர்கள். சஹாதேரர்களே முடிந்தால் ஏதாவது பாரிய விளைவுகள் நடப்பதுக்குமுதல் தடுக்கப்பாருங்கள்.உங்களது மௌனத்தை கலைக்கும் நேரம்வந்தாச்சி. இப்பயாவது அல்லாஹுக்காக ஒன்றுசேருங்கள். இந்த ரணிலை,மைத்திரியை நம்புவதில் பலனில்லை. மாற்றுவலியைப் பாருங்கள்.

    ReplyDelete
  2. மக்களே உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ?????

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து அன்று மைத்திரி றணில் கூட்டை ஆட்சிக்கு கொன்டுவந்தோம்.
    ஆனாலும் அன்றே மைத்திரி நமக்கெதிரான ஆட்டத்தை ஆட ஆரம்பித்ததை நினைவிருக்கிறதா ???

    ஆமாம் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் ஆட்சிக்குவர வாக்களித்தபோது - அப்போதும் மகிந்வோடு இருற்து ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லவை - அதுவும் தோற்கடிக்கப்பட்ட ஹிஸ்புல்லாவை எம்பி பதவி கொடுத்து மந்திரியாக ஆக்கினார் மைத்திரி. ஏன் எதற்காக ????

    அன்று ஹிஸ்புல்லவை நமக்கெதிராக ஏவிய மைத்திரி - இன்று ஞானத்தை ஏவி வேடிக்கை பார்க்கிறார்.

    ஒப்பிட்டுப் பார்த்தால் மகிந்த மைத்திரியைவிட எத்தனையோ படிமேல்.............

    இவன் ரஷ்யாவில் வைத்து மறிச்சுக்கட்டிப் பிரதேசத்தைக் கபழீகரம் செய்ய கையெழுத்திட்டவனல்லவா - இந்த மைத்திரி

    நம்மட காக்கா மாருக்கெல்லாம் வாய்க்குள்ள புட்ட வச்சு தச்சுப் போட்டானுவ மைத்திரியும் றணிலும் சேர்ந்து...........

    அதலதான் அவனுவ அறிக்கைய மட்டும் விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறானுவ.............

    இனி மீதம் இருப்பது ஒன்றுமட்டும்தான் - அது ஜானத்தை ஜானத்தின் பாசையில் எதிர்கொள்வது.............

    ReplyDelete

Powered by Blogger.