Header Ads



இனவாத தேரர்களை கட்டுப்படுத்துங்கள், பிரதமர் முன்னிலையில் ரிஷாட் வலியுறுத்து

இனவாத பௌத்த மத குருமார் ஒரு சிலர் சட்டத்தை கையிலெடுத்து தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டுக்கொண்டிருப்பதை அரசாங்கம் உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

மன்னார் மாவட்ட செயலக நிருவாக கட்டிடத்தை இன்று காலை (19.05.2017) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.  அவர் கூறியதாவது, 

பௌத்த மத குருமார்களில் ஒரு சிலர் ஜனாதிபதி போலவும், பிரதமர் போலவும், பாதுகாப்பு அமைச்சுப் போலவும் செயற்பட்டு வருகினறனர். அதுமட்டுமன்றி அவர்கள் சட்டத்தை மதிப்பதாகவுமில்லை. இவர்களின் செயற்பாடுகளை பார்க்கும்போது வேதனையாக இருக்கின்றது. எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது இந்த நாட்டில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இனவாதத்தை வளர்த்து அதன் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டுமென்ற ஒரு சதியின் பின்னணியிலேயே இவ்வாறான செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியினதும், பிரதமரினதும் நல்ல தன்மையினை இவர்கள் தமது நடவடிக்கைக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.

30ஆண்டுகால யுத்தத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக  வாழும் இனங்களுக்கிடையிலே மீண்டும் குரோதத்தை தோற்றுவித்து, இந்த நாட்டில் இரத்த ஆற்றினை மீண்டும்  ஓடச்செய்து நாட்டை குட்டிச்சுவராக்க ஒரு சிறு கூட்டம் நினைக்கின்றது. வெளிநாடுகளில் கையேந்தும் நாடாக இலங்கையை ஆக்கவேண்டும் என்பதுவும் இவர்களின் இலக்கு. இவர்களின் செயற்பாடு நாளுக்குநாள் மொசமாக இருக்கினறது. இதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் அனுமதிக்கக்கூடாது. இன்று காலை கூட ஜனாதிபதியை தொடர்பு கொண்டு இதனை தெளிவாக தெரிவித்தேன். 

நமது நாடு பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் கட்டியெழுப்பப்படவேண்டும். என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் பிரதமரினது அர்ப்பணிப்புகளை நான் நினைத்துப்பார்க்கின்றேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட கிடைத்த சந்தர்ப்பத்தை நாட்டு நலனுக்காக அவர் விட்டுக்கொடுத்து நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்பதில் மேற்கொண்ட அவருடைய தியாகம் போற்றப்படவேண்டியது.

சிறுபான்மை  மக்கள் நிம்மதி இழந்து தவிக்கினறனர். காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகள் சுமார் 89நாட்கள் தொடர்ச்சியாக வீதிகளில் போராட்டம் நடத்துகின்றனர். இன்று காலை அமைச்சர் சாகலவும் நானும் அந்த இடத்திற்கு சென்றோம். அத்துடன் பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாட்டம் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவற்றுக்கும் பிரதமர் ஜனாதிபதியுடன் இணைந்து தீர்வு காண்பார் என நம்புகின்றேன்.  அத்துடன் பிரதமரின் 10லட்சம் பேருக்கான வேலை வழங்கும் திட்டத்தில் அமைச்சர்களாகிய எங்களது பங்களிப்பு வெகுவாக இருக்கும் என உறுதி கூறுகின்றேன். 

மன்னார்; மாவட்டத்திலே சிலாபத்துறை, முள்ளிக்குளம் கிராம மக்களின் வாழ்விடங்கள் கடற்படையினராலும், இராணுவத்தினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இவற்றை அந்த மக்களிடம் கையளிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்றும் அமைச்சர் ரிஷாட் கூறினார்.

5 comments:

  1. இப்படிசொல்லியெல்லாம் பருப்புவேஹாது தலைவரே. இப்போதுள்ள பிரச்சனைக்கு இதுபத்தாது. கரசரமில்லாமல் இங்க எதையும் புடுங்கமுடியாது. காரசாரமான கோரிக்கையை முன்வய்யுங்கள். இப்படி போத்தி போத்தி இருந்தால் ஞானயை அடக்கமுடியாது. ஏனனில் பெரியமரமா சம்பிக்க இருக்கும்வரைக்கும் இனவாதிகளை அடக்குவது கஷ்டம்தான். அதனால உங்கட கோரிக்கை சற்று உரைக்கிறமாதிரி இருக்கணும்.பதிப்போனால் இதைவிட பெரிய அந்தஸ்தை அல்லாஹ் தருவான்.அதுசரி
    நீங்கள் மட்டும் தனியாக என்னதான் செய்வீர்கள். இந்த பாழாப்போன முஸ்லிம்கட்சியென்று சொல்லிட்டு திரிகிற நாய்கள் எங்கேபோய்ட்டு. சாணக்கியம் மட்டும் பேசத்தெரித்த நாய்களுக்கு இந்த சமூகத்தின் அவல நிலை புரியிதில்லியா? முஸ்லிம்கட்சிக்காரர்களே மக்களின் பொறுமையை சோதிக்காதீர்கள்.

    ReplyDelete
  2. Muslim politicians are very good at issueing statesments. We're not ready to trust you all. We need a change in politics. Our wisest choice will be JVP. If we caste our votes to JVP, they'll definitely raise their voice for us.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Dear brother Lareef Abdul Majeed,
    DO NOT THINK LIKE THIS. EVEN HILMY AHAMED OF MUSLIM COUNCIL OF SRI LANKA HAS STARTED TO CAMPAIGN MUSLIM VOTES TO THE JVP. WHAT WE NEED ID "NEW THINKING" INSHA ALLAH. THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE “CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS” TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE. It is by only expressing and showing our political strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or idealogy, but emerging as a “NEW POLITICAL FORCE”, we will stand to gain what we are loosing, INSHA ALLAH.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  5. Hello Mr. mustafa
    அவர் யார் இவரா ?

    ReplyDelete

Powered by Blogger.