தோப்பூர் பதற்றநிலை, ஜனாதிபதியும் களத்தில் குதிப்பு - அச்ச நிலை நீடிக்கிறது
தோப்பூர் செல்வநகர் பதற்றநிலை பற்றி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விபரித்தவை,
"வெடிச்சத்தமும் வால் வீச்சும் மேலோங்கியிருந்தனர். அச்சத்துடன் முஸ்லிம் மக்கள் ஓடி வந்த காட்சிகள் 2006 ஆம் ஆண்டு மூதூர் வெ ளியேற்றத்தையும் அதற்கு முன்னர் விடுதலை புலிகள் காலத்தில் இருந்த பதற்றமான நிலைமையையே காட்டின. மீண்டும் ஒரு முறை யுத்தத்தின் கொடூரத்தை அனுபவித்ததுபோல் இருந்தது."
"பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் திருகோணமலை துறைமுகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோது இச்சம்பவம் எமக்கு எட்டியது. நான் உடனே சம்பவத்தை அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன், அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தமையால் பாரிய உயிர்ச்சேதங்களை தவிர்க்கமுடிந்தது."
"உடனே ஸ்தலத்துக்கு போனோம் அங்கு நிலைமை படுமோசமாக இருந்தது. இராணுவம் பொலிஸ் பலத்தினூடாக தாக்குதல்தாரிகளை எதிர்க்கொள்ள முடிந்தது. சிங்கள மொழி பேசிய அவர்கள் எமது பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மிகவும் கடுமையான முறையில் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர்."
முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வெ ளியேறியிருக்கின்றனர். தற்போது தோப்பூரிலுள்ள பள்ளிவாசல்களில் ஆண்களும் ஐந்தாறு வீடுகளில் பெண்களுமாக தஞ்சம் புகுந்திருக்கின்றனர். மக்களின் உடமைகளை பாதுகாப்பதற்கு செல்வநகர் பகுதிக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாவட்ட செயலாளரின் உதவியை கேட்டிருக்கிறேன்."
நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. தற்போது, ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் பிரதேசத்தில் ஓரளவு பதற்குமும் அச்ச நிலைமையும் நீடிக்கிறது.
இவ்விடயம் குறித்து ஆசு மாரசிங்க எம்.பி. ஊடாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவித்திருக்கிறேன். ஜனாதிபதி என்னுடன் உரையாடினார். நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டதோடு மாவட்டவ செயலாளர் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு துறையினரின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். அத்தோடு அவர்களுக்கு தான் நேரடியாக பணிப்புரை விடுப்பதாகவும் ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக ஆளுநர், அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டதை அடுத்து இது சம்பந்தமான விசேட கூட்டமொன்று நாளை காலை 9.30 க்கு ஆளுனரின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment