Header Ads



ஞானசாரரை வீதியில் இறக்கி, முஸ்லிம்களை அச்சத்துக்குள்ளாக்கி, உரிமைகளை பறிக்க திட்டம்

ஞானசாரரை வீதியில் இறக்கி எங்களை வீடுகளுக்குள் முடக்க  கனவு காணவேண்டாம். ஞானசார தேரர் போன்றவர்களை ஏவி ,முஸ்லிம்களை அச்சுறுத்தி,எமது உரிமைகளை பறிக்கும் எண்ணம் நல்லாட்சிக்கு இருக்குமாக இருந்தால் அது பகல் கனவாகவே இருக்கும் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.

இன்று -18- நெலும் மாவத்தையில்  இடம்பெற்ற கூட்டு எதிரணி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ..

ஒரு பயங்கரவாத அமைப்பு எவ்வாறு செயற்படுமோ அது போன்று பொது பல சேனா அமைப்பும் அதன் தலைவர் எவ்வாறு செயற்படுவாரோ அது போன்று ஞானசார தேரரும் செயற்பட்டு கொண்டிருக்கின்றனர். ஞானசார தேரரின்பேச்சு அளுத்கமை கலவரத்துக்கே காரணமாகியிருந்தது.மீண்டும் அது  போன்ற ஒரு நிகழ்வை ஏற்படுத்த என்னவெல்லாம் பேச வேண்டுமோ அத்தனையும் பேசி வருகிறார்.

அண்மையில் பொலநறுவைக்கு விஜயம் செய்திருந்த ஞானசார தேரர் தாங்கள் உத்தியோக பூர்வமற்ற பாதுகாப்புபிரிவாக செயற்படப் போகிறோம் என்ற அறிவிப்பை விடுத்திருந்தார். ஒரு நாட்டில் உத்தியோக பூர்வமற்ற பாதுகாப்புபிரிவாக யாருமே செயற்பட முடியாது. அதற்கு இலங்கை அரசியலமைப்பில் எந்த இடமுமில்லை.அவ்வாறானஅமைப்புக்களை தான் பயங்கரவாத அமைப்பு என்று அழைப்பர்.இந்த விடயங்களை அரசாங்கம்பார்த்துக் கொண்டுள்ளதுடன் மௌனம் காக்கிறது.

முஸ்லிம்களுக்கு பாதகமான புதிய அரசியலமைப்பு, வடக்கு கிழக்கு இணைப்பு , விவாக விவாகரத்து சட்டம் என முஸ்லிம்களுக்கு பாதகமான பல விடயங்கள் எம்முன்னாள் உள்ளன.ஜீ எஸ் பி பிளஸ் போன்றவைக்காக எமது கலாசாரத்தை அடகு வைக்க வேண்டும்.

இவைகளால் எமக்கு பாதகம் ஏற்படும் என்ற நிலை வந்தால் நாம் வீதியில் இறங்கி போராடுவோம்.அரசுக்கு எதிராக போர் கொடி தூக்குவோம்.இவைகளை இல்லாமல் செய்து முஸ்லிம்களை வீட்டுக்குள் முடக்குவதற்க்கு இந்த அரசாங்கம் திட்டம் போடுகிறதா என்றே எமக்கு எண்ண தோன்றுகிறது.

அவ்வாறு இல்லாவிட்டால் ஞானசார தேரரை இவ்வாறு தெற்கில் இருந்து  கிழக்குக்கும் வடக்குக்கும் அலையவிடத்தேவை இல்லை. அவரின் அடாவடிகளை அடக்காமல் இருக்க வேண்டிய தேவை இல்லை.

ஞானசார போன்றவர்களை வீதியில் இறக்கி முஸ்லிம்களை அச்சத்துக்குள்ளாக்கி முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் திட்டம் இருந்தால் நாமும் வீதியில் இறங்கி போராட தயங்க மாட்டோம் என அனைவருக்கும் சொல்லி வைக்க விரும்புகிறோம் என குறிப்பிட்டார்.

3 comments:

  1. நன்றாக சொல்லியுள்ளீர்கள்.நீங்களும் மற்றைய அரசியல்வாதிகளும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எமக்கு பயமெல்லம் அந்த மொட்டைய நினைத்தல்ல எம்மை நினைத்துதான்.6இலும் சாவுதான் 100இலும் சாவுதான்..

    ReplyDelete
  2. சும்மா பேசி பேசியே காலத்தையும் நேரத்தையும் வீணாக்கவேண்டியது தான் .மனோகணேசனிடம் ஞானசார வந்து பேசும் போது அவரு வாயே தொறந்துகொண்டு மேல பார்த்துக்கொண்டு இருந்தாரு முக்கியமான நேரத்தில் பேசாமல் சாது சென்ற பிறகு வீரத்தனத்தை பேசுறாரு .சும்மா இவங்களை பற்றி பேசிவேளையில்லை.

    ReplyDelete
  3. மஹிந்த வை முஸ்லீம்கள் வெறுத்தது இவனால் , U N P அரசும் 20வீத சிங்கள வாக்குகளை இழந்து விட்டதாக ,தகவல் இதனால் தேர்தலை தள்ளிப்போடுகிறது ------- என்ன [ சார ] வந்தாலும் முஸ்லீம்கள் ஓட்டு பச்சைபார்ட்டிக்குத்தான் இழந்த சிங்கள வாக்குகளை வேறு விதமாக தக்கவைக்க ;;சாராவை;; நம்பியுள்ளதாம்

    ReplyDelete

Powered by Blogger.