முதன்முறையாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், ஞானசாரர் மீது விசாரணை - திகதி அறிவிப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான அமர்வுக்கு, இம்மாதம் 24ஆம் திகதியை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்றுத் திகதி குறித்தது.
விஜித் கே. மலகொட, பி. பத்மன் ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில், இந்த வழக்கு, விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்துக்குள் வைத்து, ஞானசார தேரர் நடந்துகொண்டதாகக் கூறப்படும் முறை, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையுமா என, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கருத்தை, ஹோமாகம நீதவான் கோரியிருந்தார்.
அத்தோடு, ஞானசார தேரர் மீதான குற்றச்சாட்டு, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமாயின், அவர் மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், நீதவான் கோரியிருந்தார்.
இந்த நிலையிலேயே, நேற்றுக் கூடிய மேன்முறையீட்டு நீதிமன்றம், 24ஆம் திகதியை, இந்த வழக்கு அமர்வுக்கான திகதியாகக் குறித்தது.
இதுவரை காலமும் ஞானசாரர் மீதான் விசாரணை சாதாரண நீதிமன்றங்களிலேயே நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆணையிடும் அலுவலகத்தில் இருந்து நீதி மன்றத்துக்கு உத்தரவு வழங்கப்பட வேண்டும்.மஞ்சள் உடை பயங்கரவாதிக்கு வெள்ளை உடை ஆட்சி பாதுகாப்பு
ReplyDeleteவெறும் நாடகம்.
ReplyDelete