Header Ads



எந்த முஸ்லிம் சகோதரனின், கடை எரிந்திருக்கும்..?

-பாயிஸ்-

இலங்கையில்    முஸ்லிம்களுக்கு  எதிராக சிங்கள பௌத்த பயங்கரவாதத்தின்  எழுட்சியில் ஏற்பட்ட தோல்வியின்  பிரதி பளிப்பாக கலவரத்தை  தூண்டும் பல்வேறு நாசகார வேலைகளை செய்துவரும் போதும் இதனை சிங்கள மக்கள்  அங்கிகரித்தற்கான  எந்த சான்றுகளையும் காணவில்லை

இதுவரை பாரிய பொருளாதார  சேதங்களை    ஏற்படுத்தும்  நோக்கில்  ஆறுக்கும்   மேற்பட்ட வியாபாரத்தளங்கள்    தீக்கிரையாக்கப்பட்ட   நிலையிலும் எந்த ஒரு பிரதேசத்திலும் மக்கள் தெருக்களுக்கு இறங்கி  வன்செயலில் ஈடுபடவில்லை  மாறாக சிங்கள மக்களும் புத்திஜீவிகளும் இதற்கான வலுவான கண்டனங்கலையே தெரிவித்து வருகின்றனர் .

பரந்த அடிப்படையில்  நாட்டின் சிலபகுதியில்   ஒவ்வொரு தினங்களும் ஓர் இரு கடைகளாக  தீகிரையாகப்பட்டு வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதன் பின்னன்னியில் மறைந்திருக்கும் குள்ளநரிக் கூட்டம் குறித்து இலக்குகள்  குறித்தும்  அடையாளம் கண்டு கொண்டாலே  திட்டங்களை  புரிந்து கொணடு  நடவடிக்கைக்கு இறங்க முடியும்  முன்னாள்  ஆட்சியாளர்களையும்  நல்லாட்சி  அரசாங்கத்தையும் மாறி மாறி குற்றம் சுமத்தி வரும் நிலையில்  பிரதமரும்  ஜனாதிபதியும்  நாட்டைவிட்டு வெளியேறி இருப்பது  பலமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது  இப்பிரச்சினையை   ஆழத்தில் இருந்து கொண்டு  இருவருக்கும்  அழுத்தம் கொடுக்கும் அமைச்சர்களிடம் இருந்து  தப்பித்துக் கொள்வதற்காக  பாதுகாப்பு தரப்புக்கு  கட்டளைகளையும்  முழுமையான  நடவடிக்கைகளையும்  மேற்கொள்ளுமாறு  ஆணை இட்டுவிட்டு  வெளியேறி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது இப்படி  இருந்தால் நாட்டு மக்கள் சந்தோசப்பட வேண்டிய ஒன்றுதான்

காலைப் பொழுதின் விடியலில் எந்த சகோதரனின் கடை எரிந்திருக்கும் என்ற கவலையுடன் செய்திகளை வாசிக்கத் துடிக்கும்  மக்கள்  தங்கள்  கையால் தாங்களே  அணியாம் இளைத்துக் கொண்டோம்  என்று முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர் களையும்  அரசியல் வாதிகளையும்  சலித்துப் போய்  இவனுகள்  செல்லாக் காசுதான்  என்று இறுதியில்  தங்கள் ஆதங்கத்தை  வெளிகாட்டிவிட்டு  முடித்துக் கொள்கிறார்கள் சிலர்  நாமெல்லாம் நம்பி வாக்களித்த அரசாங்கமோ நம்மை கைவிட்டுவிட்டது  நாயில் பயந்து  பேயில் விழுந்தோமா என்றும்  சிலர் எல்லோரும் கைவிட்டு விட்டனர்  பொது மக்களாகி நாம்தான்  எதையாவது செய்தாகவேண்டும் என்றும்  தடுமாறிக் கொண்டிருகிறது  சமூகம்     நாம்  எதிர் கொண்டுள்ள    பிரச்சனையில் ஆழத்தை விளங்கிக் கொள்ளாமல்  குனூத்  ஓதுங்கள் என்ற அறிக்கையோடு  அமைதி காக்கிறது   வழிநடத்த  வேண்டிய  உலமாசபை .

அரசியல் வாதிகளோ ஜனாபதியை சந்திக்கிறோம் பிரதமரை சந்திக்கிறோம் என்ற அறிக்கைகளோடும்  பின்னர் மறுத்துவிட்டார்  நேரம் ஒதுக்க வில்லை   மறுப்பறிக்கை யோடு    தங்கள் கையாலாகத்தனத்தை  மீண்டும் மீண்டும் நிருபித்துக் கொண்டிருகிறது .

பொதுமக்களோ  கடையை அடைப்போம்  ஊர்வலம் போவோம்  என்றும்  ஒரு ஏகோபித்த முடிவின்றி  ஒரு திட்டமின்றி  தடுமாறிக் கொண்டிருகிறது சமூகம்  புத்திஜீவிகளோ  தானும் தங்கள் பாடும் என்று கழுத்தை நீட்ட மறுத்துக் கொண்டு  ஒழித்துக் கொண்டிருகிறது .

இது இன்னும் இன்னும்  முஸ்லிம் சமூகத்தை முடமாக்கப்  போகிறது 

அவசரமாக புத்திஜீவிகளும் உலமாக்களும்  அரசியல் தலைமைகளும்  ஒன்று கூடி  ஒரு பொதுவான  திட்டத்தை  அவசரமாக  பிரச்சினைகளை ஆராய்ந்து பொருளாதரத்தையும்  உயிர்களையும் பாதுகாக்கும்  திட்டம் ஒன்றை அரசுக்கும் பாதுக்காப்பு தரப்புக்கும்  கையளிக்க வேண்டும்  அதனை உத்தரவாதப் படுத்தி  நடைமுறை படுத்தும் வரை  அரசுக்கு  பலமான அழுத்தத்தை  கொடுக்க வேண்டும்  இதுவே இன்றைய காலத்தின் தேவை ஒவ்வொரு  தரப்பினரும்  இப்பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டாள் மேலும் மேலும் பிரிச்சினை விரிந்துகொண்டு செல்வதற்கான வாய்ப்புகளையும்  தோல்வியை கண்டு வரும்  இனவாதத்தை  வெற்றியை நோக்கி  தள்ளிய பங்குதாரிகளாக  முஸ்லீம்கள்  இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை 

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் ரொம்ப அருமையான கருது. நீங்கள் சொல்லுவது முற்றிலுமுண்மை. ஒவ்வொரு குடிமகனின் அடிமனதில் உள்ளதை சரியாக சொன்னீர்கள்.உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் புத்திஜீவிகள் வாய்திறக்காமல் இருப்பது இந்த மனித சமூதாயத்திக்கு செய்யும் துரோகமாகும். எனவே Mr. Faiz சொல்வதைப்போன்று தற்போதைக்கு புத்திஜீவிகள், அரசியல் தலைவர்களின் மற்றும் சமூகசேவையாளர்களின் வழிகாட்டலும், ஆலோசனைகளும் எமது மக்களுக்கு மிக அத்தியாசமானதாகவுள்ளது. எனவே சஹோதர்களே இனிமேலும் நாங்கள் போட்டிபொறாமை போடாமல் , ஆளும்கட்சி, எதிர்க்கட்சியன்று பார்க்காது ஒன்றுசேர்வதுதான் காலத்தின் கட்டாயம்.ஆகவே ஒன்றுபடுங்கள் இன்ஷா அல்லாஹ் உண்டு வாழ்வு.

    ReplyDelete

Powered by Blogger.