அக்குறணை யகீன் மொடல் ஸ்கூலின், வாகனச் சாரதிகளுக்கான பயிற்சிக் கருத்தரங்கு
ஒரு பாடசாலைக்குச் செல்லும் பிள்ளையின் வாழ்க்கையில் அவர்களை வீட்டிலிருந்தும் வீட்டிற்கும் போக்குவரத்து செய்யும் வாகனச் சாரதிகளும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர் .
இச் சாரதிகள் ஒழுக்கமும் நேர்மையும் உள்ளவர்களானால் அவர்களது நல்ல பண்புகள் அவர்களுடன் நாளாந்தம் பிரியாணிக்கும் பிள்ளைகளிலும் பிரதிபலிக்க ஆரம்பிக்கின்றன.
மாற்றமாக அவர்களது செயற்பாடுகளும் பேச்சு வார்த்தைகளும் குண நலன்களும் தீயவையாக அமையும் போது பிள்ளைகளும் அவற்றை தமது வாழ்வில் எடுத்து நடக்க ஆரம்பிக்கின்றனர். இவ்வாறான நிலைமையில் பெற்றோரினதும் ஆசிரியர்களதும் முயற்சிகள் எவ்வளவு சிறந்தவையாக இருந்தாலும் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக ஆகி விடுகின்றன.
பாடசாலைக் கல்வி முறைகளில் இஸ்லாமிய அடிப்படையில் நவீன தீர்வுகளைத் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து கொண்டிருக்கும் கண்டி அக்குறணை யகீன் மொடல் ஸ்கூல் மற்றும் அதன் பெண்கள் பிரிவாகிய நிஸ்வான் மொடல் ஸ்கூல் ஆகிய பாடசாலைகள் இவ்விடயத்தைக் கருத்திற் கொண்டு வருடா வருடம் தமது பாடசாலைகளுக்கு பிள்ளைகளை போக்கு வரத்து செய்யும் வாகனச் சாரதிகளுக்கான பயிற்சிக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கின்றன. இதில் கலந்து கொள்ளும் சாரதிகளுக்கு முக்கிய தகவல்களும் அறிவுறுத்தல்களும் அடங்கிய Yaqeen Drivers’ Booklet புத்தகங்களும் வழங்கப் படுகின்றன.
"இன்றைய மாணவர்கள் நாளை எமது வீதிகளில் அவர்களது வாகனங்களை ஒட்டிச் செல்லும் போது இன்று அவர்கள் தமது சாரதியிடத்தில் காணும் முன்மாதிரிகள் அவர்களிடம் பிரதிபலிக்கும்.
யகீன் மற்றும் நிஸ்வான் பாடசாலைகளின் ஏராளமான சாரதியினர் இங்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றுபவர்களாகவும் மிகச் சிறந்த பண்புள்ளவர்களாகவும் இருப்பது போற்றத்தக்கது " என அதன் தலைவர் fபஹ்மி fபாரூக் தெரிவித்தார்.

சமூக நலனைக் கருத்தில் கொண்டு அண்மையில் யகீன் மொடல் ஸ்கூலில் இடம் பெற்ற சாரதிகளுக்கான பயிற்சிக் கருத்தரங்கில் கூறப்பட்ட சில அறிவுறுத்தல்கள் இங்கு தரப்படுகின்றன.
 தேவையான அனைத்து அரசாங்க ஆவணங்களையும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்
 வாகனம் பாதுகாப்பானதாகவும் போதியளவு சொகுசாகவும் இருப்பதை உறுதி செய்யுங்கள்
 உரிய நேரத்தில் பிள்ளைகளை பாடசாலையில் கொண்டு வந்து சேர்ப்பது மற்றும் அவர்களை அழைத்துச் செல்வதில் கவனம் செலுத்துங்கள்
 போக்கு வரத்துச் சட்டங்களை நல்ல முறையில் பின்பற்றும் ஒரு முன்மாதிரியான சாரதியாக நீங்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள்

 நீங்கள் கனிவான தோற்றத்துடனும் சுத்தமான ஆடையுடனும் இருப்பது முக்கியமானது
 உங்கள் வாகனத்தில் ஆசிரியைகள் வருவதாயின் அவர்களை இறுதி ஆசனத்தில் அமர வைப்பது சிறந்தது
 தேவையான துஆக்களை நீங்களும் ஓதிக்கொண்டு பிள்ளைகளுக்கும் அவற்றை ஞாபகப் படுத்துங்கள்
 வாகனத்தின் கதவுகள் சரியான முறையில் மூடப் பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள்
Masha Allah Good Effort
ReplyDelete