Header Ads



பிறந்த உடனேயே, நடக்க ஆரம்பிக்கும் அதிசய குழந்தை (வீடியோ)


மனிதர்களாக பிறந்த அனைவருமே உடனே நடக்க ஆரம்பிப்பதில்லை. தவழ்ந்து எடுத்து ஒரு வழியாக நடக்க பழக ஆரம்பிக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிடும். ஆனால் டெல்லியில் ஒரு குழந்தை பிறந்த சில நேரங்களிலேயே நடக்க ஆரம்பித்த அதிசயம் நடந்துள்ளது.

மனிதன் என்ன தான் பலசாலியாக இருந்தாலும் பிறந்த உடனே நடக்க முடியாது. சில விலங்குகள் பிறந்த உடனே நடக்க முயற்சிக்கும். ஆனால் மனிதன் பிறந்து கழுத்து நின்ற பின்னர் தான் தவழவே ஆரம்பிப்பான். சுமார் 9 முதல் 12 மாதங்களில் தான் குழந்தை நடக்கவே ஆரம்பிக்கும்.
 
ஆனால் தலைநகர் டெல்லியில் ஒரு குழந்த தாயின் கருவறையில் இருந்து வெளியே வந்த சில நேரங்களிலேயே எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளது. இந்த அதிசய நிகழ்வை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியப்படுகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் டெல்லியில் நடந்ததாக கூறப்பட்டாலும், இது பிரேசிலில் நடந்ததாகவும் ஒரு தகவல் பரவுகிறது. எங்கு நடந்தால் என்ன பிறந்த உடனே ஒரு குழந்தை நடக்க ஆரம்பித்ததை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

No comments

Powered by Blogger.