Header Ads



இலங்கை மக்களுடன் தோளோடு, தோள்நின்று செயற்பட தயார் - பாகிஸ்தான்

இலங்கை மக்களுடன் தோளோடு தோள் நின்று செயற்பட தமது நாடு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சாப்ராஸ் அஹமட்கான் சிப்ரா இதனை அறிவித்துள்ளார்

இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில், பாகிஸ்தான் அரசாங்கமும் அந்த நாட்டு மக்களும் துயரம் கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் இலங்கை அதிகாரிகளுடன் பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்புகளை கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் கோரும் பட்சத்தில் நிவாரணப்பொருட்களை உடனடியாக அனுப்புவதற்கு தமது அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் சிப்ரா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் ஏற்பட்டிருந்த வரட்சியின்போது பாகிஸ்தான் அரசாங்கம் சுமார் 10,000 மெற்றிக்தொன் அரிசியை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Govt. of Sri Lanka is awaiting Janasara's Approval before accepting your assistance.

    ReplyDelete
  2. pakistan want to help to compete with india and chinan
    sri lanka is geographical important location for india,pakistan,china,
    all of them will send aids,

    ReplyDelete

Powered by Blogger.