சவுதி அரேபியா - அமெரிக்க ஆயுத ஒப்பந்தத்தை மீளப்பெற கோரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் அண்மையில் சவுதி அரேபியாவுடன் செய்துக்கொண்ட ஆயுத ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா சென்றபோது அந்நாட்டுடன் 110 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
தற்போது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியுள்ள டிரம்பிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சவுதி அரேபியாவுடன் செய்துக்கொண்ட ஆயுத ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த Ted Lieu மற்றும் Ted Yoho ஆகிய இருவர் பேசுகையில், ‘சவுதி அரேபியாவுடன் ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது ஆபத்தானது.
அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களை சவுதி அரசாங்கத்திற்கு வழங்கினால் அவர்கள் அவற்றை தவறான வழியில் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
குறிப்பாக, ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி போராளிகளுக்கு எதிரான யுத்தத்தில் சவுதியும் ஈடுப்பட்டு வருவதால் அந்நாட்டில் இந்த ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது.
இதனால் ஏமன் நாட்டில் மோசமான விளைவுகள் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும், இதுகுறித்து ஜனாதிபதி டிரம்ப் இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான்காறன் சொல்லி இருப்பான் அல்லது இஸ்ரவேல்காறன் சொல்லி இருப்பான்
ReplyDelete