பொதுபல சேனா விடயத்தில் முஸ்லிம்கள், அதிகமாகவே பொறுமை காக்கிறார்கள்
சிங்கள இனவாதிகள் விடயத்தில் மட்டும் இலங்கை முஸ்லிம்களின் பொறுமை பாராட்டத்தக்கது. அதனை பொறுமை என்பதை விட இயலாமையின் வெளிப்பாடு என்று சொன்னாலும் மிகையாகாது.
பொதுவாகவே இலங்கை முஸ்லிம்கள் விரைவாக உணர்ச்சி வசப்படுபவர்கள். எதையும் அறிவு ரீதியாக சிந்திப்பதை விட உணர்வு ரீதியாகவே அதிகம் சிந்திப்பர். எந்த விடயத்தையும் அமைதியாக செய்ய மாட்டார்கள்.
கலியாண வீடாக இருக்கட்டும் மரண வீடாக இருக்கட்டும் அங்கு பொறுமையாய் காரியமாற்றுதலை காண முடியாது. மாறாக சத்தமும் பதற்றமும் தான் அதிகம் இருக்கும்.
வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் என்றால் அமைதியாக செல்ல மாட்டார்கள். வேகமாக ஏதோ சண்டைக்கு போவது போல் போவார்கள். வாண் எகிற சத்தமிடுவார்கள்.
குத்பாவில் கூட அனைவரும் செவிடர்கள் என்பது போல் தேவையில்லாமல் சத்தம் உயரும்.
தராவீஹ் தொழ போகும் போதும் வரும் போதும் அமைதி இருக்காது.
இப்படி எந்த விடயத்தை பார்த்தாலும் பொறுமை, அமைதி என்பவற்றை இலங்கை முஸ்லிம்களிடம் காண முடியாது. ஆனால் பொது பல சேனா வந்த பின் அவர்கள் விடயத்தில் மிக அதிகமாகவே முஸ்லிம்கள் பொறுமை காக்கிறார்கள். எத்தனை பள்ளிகள் உடைக்கப்பட்டாலும், எத்தனை கடைகள் எரிக்கப்பட்டாலும், அள்ளாஹ்வும் அவனது தூதரும் அவமானப்படுத்தப்பட்ட போதும் தாங்கள் பலயீனமானவர்கள் என்பதை முஸ்லிம்களின் உயர் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை உணர்ந்து பொறுமையாக உள்ளமையை பாராட்டவே வேண்டும்.
இதே போன்று முஸ்லிம்கள் தமக்கிடையில் ஏற்படும் இயக்க, ஜமாஅத் பிரச்சினைகள், மார்க்க கருத்து வேறுபாடுகள் போன்ற விடயங்களிலும் இதே பொறுமையை கடைப்பிடித்தால் எத்தனை சிறப்பாக இருக்கும்.!
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி,
உலமா கட்சி
இவர் என்ன சொல்ல வருகிறார்... அடி தடியில் இறங்க சொல்கிறாரா? ஒன்றும் புரியவில்லை...
ReplyDeleteMolavi avargale ,
ReplyDelete1. Thozhugaikkaaga virainthu vaarungal !
2. 24 mani neraththukkul janazavai adakkividungal.
3. Avasara Avasaramaaga saappidungal .
4. Janazavai kondusellumpozum orey oattamthaan.
Innum evvalavo ! Ippadiyellam Makkalaip pazhakki
vittathu yaarenru konjam sollungaleyn ?
He can take the lead to congregate all the parliamentarians for the worthy course
ReplyDeleteTell Him to do what he says and show to others. Everybody can talk.
ReplyDeleteivar oru seththinil nattiya kambupoll
ReplyDeleteMedia should have social responsibility not to publish like this opinion of one person as it will affect the whole community...
ReplyDelete